(Reading time: 19 - 37 minutes)
Chinna marumagal
Chinna marumagal

இடத்தில என்னை வைச்சி பார்த்தாதான் நீ இங்கிருந்து போனாலும் யாரும் உன்னை தடுக்க மாட்டாங்க இல்லைன்னு வையேன் இந்த ஜென்மத்தில உன்னால மூர்த்தியோட சேர முடியாது, சேரவும் இங்கிருக்கறவங்க விடமாட்டாங்க, உன்னோட காதலுக்கு முன்னாடி அவங்களோட கௌரவம், வீட்டு மானம், மரியாதைதான் முக்கியமா பார்ப்பாங்க ஜானு”

  

”ஆமாம் மஹதி யாருமே என் காதலை புரிஞ்சிக்கலை, அட்லீஸ்ட் நீயாவது என் ஃப்லீங்ஸை புரிஞ்சிக்கிட்டியே, அதுசரி வேங்கையன் எப்படி உனக்கு சார்பா நடந்துக்குவாரா”

  

”தெரியலை அவருக்கும் நடக்கறது நாடகம்னு தெரியாது, தன் வாழ்க்கைக்காக என்னை ஏத்துக்குவார்ன்னு தோணுது”

  

”தப்புக் கணக்கு போடாத மஹதி, வேங்கையன் நீ நினைக்கற ஆள் இல்லை ஒண்ணு போனா இன்னொன்னுன்னு போறதுக்கு, அவர் ராமர் மாதிரி”

  

”என்னத்த நான் வந்ததும் என்னைப் பார்த்து அவ்ளோ அழகா பாடினாரே அவரா ராமரு ஆமா, அவருக்கு இவ்ளோ அழகா பாட வரும்னு ஏன் என்கிட்ட நீ சொல்லலை”

  

”எனக்கே தெரியாது மஹதி அவர் பாடவும் நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன் தெரியுமா”

  

”சரி விடு எது எப்படியோ வேங்கையன் அப்புறம் அவங்க அம்மா இவங்க ரெண்டு பேருமே என்னை ஏத்துக்கிட்டாங்க, அப்படியே அவங்களுக்கு கொஞ்சம் நெருடல் வந்தாலும் நான் நடிச்சே அவங்களை கவர்ந்துடறேன் ஆனா, வீரசிங்கத்தை என்னடி செய்றது அவரை பத்தி நீ எனக்கு சொல்லலையே”

  

”சொல்லனும்னு தோணலை மஹதி, நீ மட்டும் இப்படி ஒரு ட்ராமா நடத்தப்போறேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு துணையா நின்னிருப்பேன்”

  

”வேணாம் ஜானு இப்பவும் நான் தனித்தே செயல்படறேன்”

  

”என்னடி சொல்ற”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.