(Reading time: 19 - 37 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”ஆமாம் ஜானு நீ எனக்கு துணையா இருந்தா அப்புறம் நான் நினைச்ச காரியம் கெட்டுடும்”

  

”எப்படி சொல்ற”

  

“பின்ன நீ என்கூட இணக்கமா இருந்தா, உன்னை இந்த வீட்டை விட்டு விரட்டமாட்டாங்க, உன்னையும் வைச்சிப்பாங்க, என்னையும் வைச்சிப்பாங்க, இந்த வீட்டுக்கு 2 மருமகள் தேவையா சொல்லு”

  

”சரிடி நான் உனக்கு எதிராவே நிக்கறேன்”

  

”போதாது நீ எப்படி வேங்கையனை வெறுக்கறியோ, அதே போல நீ என்னையும் வெறுக்கனும்”

  

”உன்னையா நீ என் உயிர்தோழியாச்சே என்னால எப்படி உன்னை வெறுக்க முடியும்”

  

”அய்யோ நான் நடிக்கச் சொன்னேன்”

  

”நடிப்பா”

  

”ஆமாம் என்னை பிடிக்காத மாதிரி நீ நடிக்கனும், திட்டனும், குறை சொல்லனும்”

  

”எதுக்கு இப்படி செய்யனும்”

  

”இப்படி செய்ய செய்ய தன்னால உன்மேல இவங்க வைச்சிருக்கற பாசத்தையும் அக்கறையையும் விட்டுடுவாங்க, உன்னை வெறுக்க ஆரம்பிப்பாங்க, அப்புறம் நீ கோர்ட் வரைக்கும்லாம் போய் அலைய வேண்டாம், அவங்களே ஒரு நாள் உன்னை இந்த வீட்டைவிட்டு போ வெளியன்னு சொல்லிடுவாங்க, அவங்க அப்படி சொன்னதும் நீ மூர்த்திகிட்ட போயிடு“

  

”ஐ ஜாலி இந்த திட்டம்கூட நல்லாயிருக்கு மஹதி”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.