”நாம உஷாரா இருக்கனும் ஜானு, இங்க இருக்கறவங்க நான் நினைச்ச மாதிரி அப்பாவிங்க இல்லை எல்லாமே உஷார்பார்ட்டிங்க, அதுலயும் உன் மாமனார் கண்கொத்திப் பாம்பா பார்க்கறாரு, உன் அத்தை சரியான சென்டிமென்ட் பார்ட்டி, தன் பிள்ளைக்காக கொலை கூட செய்வாங்க போல இருக்கு, அப்புறம் வேங்கையன் அவரை எந்த கணக்குல சேர்க்கறதுனனு எனக்கு தெரியலை, உன் அத்தையையும் வேங்கையனையும் சரிகட்டிட்டா கூட உன் மாமனாரை சரிகட்டறது ரொம்ப கஷ்டம்னு தோணுது ஜானு”
”முதல்ல என்கிட்ட இந்த திட்டத்தை பத்தி சொல்லியிருந்தா நான் உனக்கு சில டிப்ஸ்களை சொல்லியிருப்பேன்ல, அவசரப்பட்டு இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டியேடி”
”அதுக்குன்னு ஆரஅமரவா வரமுடியும், எனக்குன்னு வீடு, அப்பா, அம்மா இருக்காங்க, அவங்க என்னை தேடமாட்டாங்களா நான் ஒரு மாசத்துல வந்துடறேன்னு சொல்லியிருக்கேன், நான் மட்டும் ஒரு மாசம் கழிச்சி போகலைன்னா பெரிய பிரச்சனையாயிடும் ஜானு”
”சரி சரி புரியுது புரியுது அப்போ நீ மூர்த்தி மாமாவை பார்க்க வரலையா”
”இன்னிக்கு வேணாம் வேற ஒரு நாள் அவரை போய் பார்க்கலாம் ஆமா ஒரு விசயம் சொல்லு நீ வேங்கையனை விட்டு போனதும் உன்னை மூர்த்தி ஏத்துக்குவாரா”
”கண்டிப்பா”
”உனக்கு உறுதியா தெரியுமா, பின்னாடி உன்னை ஏத்துக்காம போனா உன் வாழ்க்கையே நாசமாயிடுமே, அரசனை நம்பி புருஷனை கைவிட்டக்கதையா ஆயிடப்போகுதுடி”
”அப்படி ஒண்ணும் ஆகாது மஹதி, என் மூர்த்தி மாமா இப்ப வாழ்க்கையில பக்காவா செட்டில் ஆயிட்டாரு, முன்னயாவது வேலை வெட்டி இல்லை, எப்படி கல்யாணம் செய்துக்கறது, கல்யாணம்னு வந்து நின்னா என்னை தரமாட்டாங்கன்னு நினைச்சி விலகியிருந்தாரு ஆனா, இப்ப அப்படியில்லையே நான் இங்கிருந்து போனா அவர் கண்டிப்பா என்னை ஏத்துக்குவாரு, எனக்கு நம்பிக்கையிருக்கு, அவர் ஒருநாளும் என்னை கைவிடமாட்டாரு”