மஹதியோ நிலைமை மோசமாவதைக் கண்டு வேணியை பார்த்து பேசும்படி சைகை செய்ய வேணியோ வீரசிங்கத்தின் முன் கைகூப்பி நின்று
”இதப்பாருங்க அண்ணா என் பொண்ணு மனசுல அந்த மூர்த்திதான் இருக்கான், அது தெரிஞ்சும் நாங்க வேங்கையனோட கல்யாணம் செய்து வைச்சு பெரிய தப்பு செய்துட்டோம், கல்யாணத்துக்கு பின்னாடியாவது அவள் மனம் மாறுவாள்ன்னு பார்த்தா கோர்ட் டைவர்ஸ்னு பிரச்சனையை பெரிசு பண்ணிட்டா, கோர்ட் 6 மாசம் அவகாசம் கொடுத்திருக்காங்க, அந்த 6 மாசத்தில அவள் மனசு மாறாம போனா பாவம் வேங்கையனோட வாழ்க்கையே பாழாயிடும் , என் பொண்ணுக்கு என்ன அவள் ஆசைப்பட்டவன் கையை பிடிச்சிக்குவா, தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க செய்த தப்புக்கு பாவம் வேங்கையன் பலியாயிட்டான் அதனால” என இழுக்க வீரசிங்கமோ
”அதனால“ என அதட்ட அவரோ எச்சில் விழுங்கியபடியே
”செய்த தப்புக்கு பிராயசித்தம் தேடி வந்திருக்கோம்“
”பிராயசித்தமா இதுல உங்க தப்பு என்ன இருக்கு, வேங்கையனும் ஜானகியும் சின்ன பிள்ளைகளா இருக்கறப்பவே நம்ம இரண்டு குடும்பமும் பேசி வைச்சது, கொடுத்த வாக்கை நிறைவேத்த இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைச்சோம், ஜானகி மனசுல மூர்த்தியிருக்கான்ங்கற விசயமே எங்களுக்கு வேங்கை சொல்லித்தான் தெரியும், அதுக்காக அவளை அப்படியே அனுப்பிட முடியுமா, வேங்கையை விட மூர்த்தி சின்னவன் அண்ணன் மனைவியை அண்ணியா பார்க்கனும், அவனும் அப்படித்தான் பார்க்கறதா என்கிட்ட சொல்லியிருக்கான், அப்படியிருக்கறப்ப எப்படி ஜானகி என் பையனை விட்டுட்டு மூர்த்திகிட்ட போவா அப்படி போனா ஊர் தப்பா பேசாதா”
”அதுக்குதான் டைவர்ஸ் வாங்கப் போறாளே அண்ணா”
”வாங்க விடுவேனா நானு கோர்ட் என்ன கோர்ட்டு, அதெல்லாம் செல்லாது இந்த ஜென்மத்தில என் பையனுக்கு பொஞ்சாதின்னா அது ஜானகிதான், இந்த வீட்டு மருமகளும் அவள்தான், வேற யாரும் தேவையில்லை” என சொல்ல ஜானகிக்கு கோபமே எழுந்தது, மஹதியோ