(Reading time: 19 - 38 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”எது நானா இல்லையே நான் சொன்னதைக் கேட்டு யாரும் பயப்படலை, நீங்க சொன்னதைக்கேட்டுதான் எல்லாரும் மனசு மாறி படிக்க போயிருக்காங்க, எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் சார் நீங்க கிரேட்”

  

”என்ன கிண்டலா இதப்பாரு நீ இப்படி பேசினா நான் அப்படியே இறங்கி வந்துடமாட்டேன், உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு நினைச்சி அப்படி பேசினேன் அவ்ளோதான் நான் கிளம்பறேன் எக்கேடு கெட்டுப் போ” என எரிந்துவிழுந்துவிட்டு அப்போதே கார் ஏறி விரைந்தான் கம்பெனி நோக்கி. அவன் சென்றதும் மாதவியை நினைத்து பரிதாபப்பட்டாள் கண்ணகி.

  

மறுபக்கம் கம்பெனியில் தடாலடியாக நுழைந்த கோவலனோ அனைவரையும் விட்டு முதலில் தேடியது மாதவியைதான்

  

”மாதவி மாதவி எங்க இருக்க நீ” என கத்த அவளோ அடித்துபிடித்து அவன் முன் வந்து நின்றாள்.

  

”என் ரூமுக்கு வா” என சொல்லிவிட்டு அவன் செல்ல அவளோ நொந்துப் போனாள்

  

”அடியேய் கண்ணகி, இன்னிக்கு என்னடி செய்து வைச்ச இவனை, உன் மேல இருக்கற கோபத்தை என்கிட்ட கொட்டிட்டு சமாதானம் ஆகறானே, என்னாயிருக்கும் ஓ காலேஜ் ஸ்ட்ரைக்குன்னு சொன்னாள்ல மறந்தே போயிட்டேன், அப்ப பெரிசா ஏதோ நடந்திருக்கு இன்னிக்கு நான் வசமா மாட்டிக்கிட்டேன்” என நினைத்துக் கொண்டே கோவலனின் அறைக்குச் சென்றாள். அங்கு அவனோ இருக்கையில் அமர்ந்தும் நிம்மதியின்றி பதட்டமாக கோபமாக இருந்தான், அவனின் இந்த நிலைமையைக்கண்ட மாதவியோ

  

”கோவலன்” என மெதுவாக அழைக்க அவனோ

  

”ம்ம்ம்” என கர்ஜிக்க

  

”ஆஹா சிங்கம் கர்ஜிக்குதே இப்ப நாம சிக்கினோம் புள்ளிமானை வேட்டையாடற மாதிரி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.