வேட்டையாடுவானே என்ன செய்யலாம்” என யோசிக்க கோவலனோ
”மாதவி எனக்கு தலையே வலிக்குது” என்றான் அவளோ சற்றும் யோசிக்காமல் அவசரமாக வெளியேறிச் சென்று தனது கைப்பையில் எப்போதும் வைத்திருக்கும் ஒரு தலைவலி நிவாரணியை எடுத்துக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள்
”இந்தாங்க சார் இதை நெத்தியில தடவிக்குங்க தலைவலி போயிடும்” என சொல்ல அவனோ அதை வாங்கிப் பார்த்துவிட்டு
”என் தலைவலியெல்லாம் இதுல குணமாகாது மாதவி” என்றான்
”வேற எப்படி குணமாக்கறது ஆஸ்பிட்டலுக்கு வேணா” என இழுக்க
”வேணாம் ஏதாவது செய் ப்ளீஸ்“
”நான் என்னத்த செய்றது சரியான லூசா இருக்கானே, என்ன செய்யலாம்” என மனதுள் புலம்பியவளுக்கு சட்டென தெரிந்தது பாடுவதுதான் உடனே ஒரு அழகான பாடலை அற்புதமாக பாடிவைத்தாள் மாதவி
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி