(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

அவனைக்கண்ட காவேரியோ மென்மையாக சிரித்துவிட்டு சென்றுவிட கொம்பனுக்கு குழப்பமே மிஞ்சியது, முதல் பாடம் சொதப்பிவிட்டதால் அடுத்த பாடத்திற்க்கு சென்றான்.

  

அவள் எப்போது அசந்து நிற்பாள் முத்தம் தரலாம் என அவளையே சுற்றி சுற்றி வந்தான், அவளும் அவனது வரவை உணர்ந்து அவனை ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள். இருப்பினும் எப்படியோ அவள் அசந்த நேரம் அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க அவளோ அந்த முத்தத்தை ரசிக்காமல் வெறுப்பாக அதை கையால் துடைத்துவிட்டு சென்றுவிட அவனுக்கு ஏமாற்றமாகிப் போனது

  

சரி அடுத்த பாடத்திற்கு சென்றான், திண்ணையில் அமர்ந்திருந்த காவேரியின் முன் வந்து தடாலென நின்றான், அவளோ அதைக்கண்டு பயந்துவிட்டாள், அவனோ கணக்குபிள்ளையை பார்க்க அவனோ பாடலை ஓடவிட்டான், வெறும் மேளசத்தம்தான் அதற்கு அவன் போட்ட ஆட்டம் அந்த தெருவே வேடிக்கை பார்த்தது, சாவிற்கு குத்தாட்டம் ஆடுவது போல ஆடிவைக்க காவேரிக்கு கடுப்பாக இருந்தது, சே என நொந்தபடியே வீட்டிற்குள் சென்றுவிட அவன் நொந்துப் போனான்.

  

கணக்குபிள்ளையோ கொம்பனை தனியாக அழைத்துச் சென்று பேசினான்

  

”நண்பா இது வேலைக்கு ஆகாது”

  

”அதெப்படி வேணும்னே செய்றாளா அவளேதானே இப்படி செய்யனும்னு சொல்லிக் கொடுத்தா, அதை அப்படியே செய்தா ரசிப்பாள்ன்னு பார்த்தா அவள் பாட்டுக்கு போறாளே”

  

”இதுல சொல்ல என்னடா இருக்கு உன்னோட திட்டம் அவளுக்கு தெரிஞ்சிடுச்சி நண்பா”

  

”என்னடா சொல்ற”

  

”ஆமாம்டா உனக்கு பாடம் எடுத்த மாதிரி அவள் நடந்திருந்தா அவள் மனசுல நீயிருக்க, அவள் உன்னை விரும்பறா, அவளும் நீ செய்றதை பார்க்க ஆசைப்படறாள்ன்னு

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.