நினைக்கலாம், ஆனா இங்க அப்படியா நடக்குது, உன்னை வேணும்னே அலைகழிய வைக்கறா, உன்னை வெறுப்பேத்தறா, எனக்கென்னவோ நீதான் முட்டாள் ஆயிட்ட” என சொல்ல கொம்பன் அதிர்ந்து கோபத்துடன் காவேரியைக் காணச் சென்றான்.
அவளோ தனது அறையில் இருக்க அவளிடம் சென்றவன்
”காவேரி” என கோபமாக அழைக்க அவளோ மெதுவாக திரும்பிப் பார்த்து
”எதுக்கு இந்த கோபம்”
“நீ சொன்னது போலவே நான் நடந்துக்கிட்டேன் பின்ன ஏன் காவேரிக்கு என்னை பிடிக்கலை”
”ஏன்டா என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு, என்னை காதலிக்க என்கிட்டயே வந்து நீ பாடம் கத்துக்குவ, நான் முட்டாள் போல உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கனுமா, உன்னோட திட்டம் என்னிக்குமே பலிக்காது, நீ எப்ப காதல்ன்னு வந்தியோ அப்பவே நான் தெரிஞ்சிக்கிட்டேன், நீ ஏதோ திட்டம் தீட்டறன்னு என்ன என்னை மடக்க காதல்ங்கற உத்தியை கையில எடுக்கறியோ, இதப்பாரு காதல்ங்கறது தானா வரனும், அதை செயற்கையா கொண்டு வரக்கூடாது, நீ செய்றது கூட நடிப்புதான், உனக்குள்ள எந்த காதலும் இல்லை, எப்படியாவது இங்கிருந்து என்னை கூட்டிட்டு உன் அம்மாகிட்ட போகனும் அதானே உன் எண்ணம்”
”ஆமாம்டி அதான், இன்னும் எத்தனை நாள்தான் நான் இப்படியே இங்க இருக்கறது கல்யாணம் ஆகி 3 மாசம் ஆகுது, ஊருக்குள்ள எனக்கிருந்த மதிப்பு போயிடுச்சி என்னை நினைச்சி என் அப்பா அம்மா கவலையா இருக்காங்க, எனக்கும் இங்க இருக்கறது பிடிக்கலை, மாப்பிள்ளையா இருக்க ஆசைப்படறேன் ஆனா வீட்டோட இருக்க ஒரு மாதிரியா இருக்கு”
”அதுக்கு என்ன செய்றது கொம்பா உன் தலையெழுத்து இப்படித்தான் வாழனும்னு இருந்தா யாரால அதை மாத்த முடியும்”