”என்ன இருக்கு உன்னைப் பத்தி நான் தெரிஞ்சிக்கறதுக்கு, கொஞ்ச நாள் நீ இங்க நடிக்கப் போற, ஜானகி என் வாழ்க்கையில வந்ததும், நீ கிளம்பி போயிடுவ அவ்ளோதானே”
”ஆமாம் அவ்ளோதான்” என்றாள் சலிப்பாக
”சரி சரி நீ களைப்பா இருப்ப, கொஞ்ச நேரம் ஓய்வெடு”
”சரி அப்புறம் மூர்த்தி விசயம் வேற யாருக்கும் சொல்லிடாதீங்க”
”அம்மாகிட்ட கூட சொல்லக் கூடாதா”
”அய்யோ வேணாம் அவங்களுக்கு தெரிஞ்சா காரியமே கெட்டுடும் அமைதியா இருங்க”
”சரி சரி நான் எச்சரிக்கையா இருக்கேன்” என சொல்லிவிட்டு அவன் அறையைவிட்டு வெளியேறி சென்றுவிட மஹதியோ களைப்புடன் படுக்கையில் படுத்தாள்.
ஒரு புறம் வேங்கையன் மீது அவளுக்கு இருந்த காதல், இன்னொரு புறம் ஜானகியின் வாழ்க்கை, இவ்விரண்டில் எது முக்கியம் என அவளுக்கு அவளே கேள்வி கேட்டு குழம்பித் தவிக்க அந்நேரம் வந்தாள் ஜானகி
”மஹதி மஹதி ஏய் என்னடி தூங்கற எழுடி” என எழுப்பி விட அவளோ நன்றாக தூங்கி எழுவது போல பாசாங்கு செய்து கொட்டாவி விட்டபடியே
”என்னடி” என இழுக்க
”என்னடி நீ பாட்டுக்கு தூங்கற”
”வேற என்னடி செய்ய சொல்ற ஒரே களைப்பா இருக்கு”
”அதுசரி நீ இங்க வந்தது எதுக்கு வந்த வேலையை ஆரம்பிக்காம இப்படியிருந்தா எப்படியாம்“