என சந்தோஷமாகச் சொல்ல மஹதியோ நீண்ட பெருமூச்சுவிட்டு
”ஆளுக்கொரு ஆசை வைச்சிருக்கோம், யாரோட ஆசை நிறைவேறுதுன்னு பார்க்கலாம்”
”கண்டிப்பா என்னோட ஆசைதான் நிறைவேறும்”
”வாழ்த்துக்கள் ஜானு”
”உனக்கும் வாழ்த்துக்கள் மஹதி”
”தேங்ஸ்”
”சரிடி நாம பேசறதை யாராவது பார்த்தா சந்தேகம் வந்துடும், நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு ஜானகி சென்றுவிட மஹதிக்கு மனதே பாரமாகிப் போனது
”தெரிஞ்சே பாதி கிணறை தாண்டிட்டேன் மீதி கிணறை எப்படி தாண்டப்போறேன்னு தெரியலையே” என புலம்பிக் கொண்டே படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கலானாள்.
மறுபக்கம் வேங்கையனோ மூர்த்தி வீட்டிற்குச் சென்று அவனது தாய் தந்தையிடம் மஹதி சொன்னது போலவே வசனங்களை பேசி அவர்களை கரைய வைத்துவிட்டான், அவர்களும் வேங்கையன் வீட்டிற்கு வர சம்மதித்தார்கள், தாமதிக்காமல் அவர்களை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் வேங்கையன், மூர்த்திக்கு அவனது தந்தையே தகவல் சொல்லி வேங்கையன் வீட்டிற்கு அழைத்தார், மூர்த்திக்கு நடப்பது ஒன்றுமே விளங்கவில்லை, ஆயினும் தாய் தந்தையை பகைத்துக் கொள்ளும் அளவு தைரியசாலியில்லை என்பதால் வேலை முடிந்ததும் வருவதாக கூறிவிட இவர்கள் மட்டும் வேங்கையன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களின் வரவை அறியாத வீரசிங்கமும் மங்களமும் அதிர்ந்தார்கள். ஜானகியோ குதூகலமானாள் மஹதியோ தன் நடிப்பை தொடங்கினாள்.
”அத்தை யார் இவங்க” என மங்களத்திடம் கேட்டாள் மஹதி மங்களத்திற்கு தர்ம சங்கடமாகிப்