”ஜானகி என்ன செய்ற நீ” என கேட்க அவளோ அதிர்ந்தாள் மஹதியோ
”பயப்படாத நான் இருக்கேன் துணிஞ்சி பேசு இல்லைன்னா உன்னால இந்த வீட்டை விட்டு போக முடியாது” என மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல உடனே ஜானகியும் தனது பயத்தை விடுத்து திரும்பி வீரசிங்கத்தை பார்த்து
”பார்த்தா தெரியலையா எங்கிருந்தோ வந்தவளை விரட்டறேன்” என சொல்ல மங்களமோ
”அவளை விரட்ட நீ யாரு, அவளை நான் கூட்டிட்டு வந்தேன் விடு அவளை”
”முடியாது என்னையும்தான் நீங்க கூட்டிட்டு வந்தீங்க, மறந்துட்டீங்களா நான் இன்னும் இங்கதான் இருக்கேன் அத்தை”
”நீயிருந்து என்ன பிரயோசனம், எங்க வீட்டுக்கு வந்த சின்ன மருமகளை அனுப்பற உரிமையை யார் உனக்கு தந்தது, விடு அவளை இல்லை விபரீதமாயிடும்”
”ஓ இன்னிக்கு வந்தவளுக்காக என்னையே மிரட்டறீங்களா”
”ஆமாம்டி அவளை விடப்போறியா இல்லையா” என கேட்க ஜானகியோ
”முடியாது ஒரு உறையில ஒரு கத்திதான் இருக்கனும், நான் போன பின்னாடி ஒன்னு என்ன ஒன்பது மருமகளை கூட்டிட்டு வந்து வைச்சிக்குங்க, எனக்கு கவலையில்லை“
”அவள் இங்கதான் இருப்பாள்”
”அவள் இங்க இருந்தா நான் இங்கிருந்து போயிடுவேன் பரவாயில்லையா“
”போறதாயிருந்தா போ” என மங்களம் சட்டென சொல்ல ஜானகியின் முகம் பிரகாசமானது ஆனால் அதற்குள் வீரசிங்கம் குறுக்கிட்டார்