(Reading time: 22 - 44 minutes)
Chinna marumagal
Chinna marumagal

எப்ப வேணும்னாலும் அவள் மனசு மாறிடுவா”

  

”சரி சரி இப்ப நான் என்ன செய்றது“

  

”என்னை காதலிங்க” என்றாள் புன்னகையுடன்

  

”எது” என அலறினான்.

  

”காதலிக்கற மாதிரி நடிக்கச் சொன்னேன்”

  

”ஓ அப்படியா ஆனா எனக்கு காதலிக்க தெரியாதே”

  

”தெரியாமதான் ஜானகியை விரும்பினீங்களா”

  

”ஜானகி என் முறைபொண்ணு, சின்னப்பல இருந்து அவள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், அவளோட வாழனும்னு நான் ஆசைப்பட்டேன்”

  

”அப்போ நீங்க அவளை காதலிக்கலையா”

  

”காதல்னா தெரியலை”

  

”என்ன குழப்பறீங்க”

  

”நிஜமாவே தெரியலை, அவள் என் உசுரு அவ்ளோதான், இதுக்கு பேரு காதல்னா அப்ப நான் ஜானகியை காதலிக்கிறேன்” என சொல்ல மஹதியின் இதயத்தில் சுருக்கென்ற ஒரு வலி வந்தது, அதில் அவள் சட்டென தன் கையால் தன் நெஞ்சை பிடித்துக் கொள்ள அதைக் கண்டு பதறினான் வேங்கை

  

”என்னாச்சி”

  

”ஒண்ணும் இல்லை நீங்க சொன்னதை கேட்டு என்னோட மனசு உடைஞ்சிப் போயிடுச்சி”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.