(Reading time: 22 - 44 minutes)
Chinna marumagal
Chinna marumagal

கிடைக்காது, என் பொண்ணுக்குதான் கொடுத்துவைக்கலை, உங்க பொண்ணுக்காவது கொடுத்து வைச்சிருக்கு போல, என்னை நம்பி அனுப்பி வைங்க ஒரு மாசத்தில எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும், ஜானகியும் எங்க வீட்டுக்கு வந்த பின்னாடி தடல்புடலா உங்க பொண்ணுக்கும் வேங்கையனுக்கும் கல்யாணம் செய்து வைக்க வேண்டியது என்னோட கடமை, அப்படி இப்படின்னு பேசி ஒருவழியா எங்கப்பா மனசை சம்மதிக்க வைச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்தாரு அத்தை” என ஒரு பொய்யான கதையை விட மங்களம் அதை அப்படியே நம்பினார்.

  

வேங்கையனோ

  

”ப்பா நம்பற மாதிரி எப்படி பேசறா பாரேன், எது எப்படியோ அம்மா நம்பிட்டாங்க அதுபோதும் எனக்கு” என மனதில் நினைத்துக் கொண்டான் மங்களமோ மஹதியிடம்

  

”சின்ன மருமகளே நீ கவலையேப்படாத, நீ இந்த வீட்டுக்கு வந்தது நாங்க செய்த பாக்கியம், உன்னை உள்ளங்கையில வைச்சி தாங்கறோம்” என சொல்ல மஹதியோ

  

”ஜானகியை கூட இதே போல உள்ளங்கையில வைச்சி தாங்கியிருக்கலாமே“

  

”அவளை தாங்காமலா இருந்தோம், மகாராணி போல அவளை பார்த்துக்கிட்டோம் ஆனா, அவளுக்கு அதெல்லாம் எங்க தெரியுது, தூங்கறவங்களை எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எப்படி எழுப்பறது, நாங்க என்னதான் அவளை கண்ணுக்குள்ள வைச்சி பார்த்துக்கிட்டாலும் அவளுக்கு எங்க அன்பு, பாசம் பிடிக்கலையே என்ன செய்றது”

  

என வருந்த

  

”அத்தை என்ன அத்தை இதுக்காக வருந்தலாமா, நான் கேட்டது தப்புதான், மன்னிச்சிடுங்க அத்தை” என கைகூப்பி மன்னிப்பு கேட்க மங்களமோ

  

”நீ ஏன்மா மன்னிப்பு கேட்கற விடு விடு, நான் ஒண்ணும் வருத்தப்படலை சரி சமையல் நடந்துக்கிட்டு இருக்கு, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் அதுவரைக்கும் பசியோட நீ இருக்க கூடாதுல்ல அதான் உனக்கு ஏதாவது வேணுமான்னு கேட்க வந்தேன்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.