”தப்பான்னா ஓ தற்கொலை போலவா”
”ஆமாம் எனக்கு பயமாயிருக்கு”
”பயமே வேணாம், நான் அவளோட தோழி அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவளோட குணம் எப்படின்னு பெத்தவங்களை விட நான் சரியா சொல்வேன், அவள் எந்த நேரம் எப்படி பேசுவா எப்படி நடந்துக்குவாள்னு எனக்கு அத்துப்படி, அவளை சுலபமா மாத்திடலாம், நீங்க நினைக்கற மாதிரி அவள் தற்கொலை எல்லாம் செய்துக்க மாட்டா மூர்த்தி அவளை ஏமாத்தினா அவளுக்கு கோபம் வருமே தவிர தப்பான முடிவு எடுக்க மாட்டா நம்புங்க”
”நீ சொன்னா சரியாதான் இருக்கும் சரி நான் போய் மூர்த்தி வீட்ல பேசறேன்”
”என்ன பேசப் போறீங்க”
”அதான் நீ சொன்ன மாதிரி அவங்களை இந்த வீட்ல தங்க வைக்கறது பத்தி”
”ஆமா நீங்க கூப்பிட்டதும் இதோ வரேன்னு வந்துடுவாங்களா என்ன“
”பின்ன எப்படி அவங்களை கூப்பிடறது“
”இங்க நடக்கற நாடகம் அவங்களுக்கு என்னிக்குமே தெரியக்கூடாது, தெரிஞ்சா மொத்த திட்டமும் பாழாயிடும்”
”சரி நான் யார்கிட்டயும் சொல்லலை, இப்போதைக்கு உனக்கு எனக்கு அப்புறம் ஜானகியோட அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா போதும்”
”சரி அப்ப ஒண்ணு செய்ங்க மூர்த்தியோட அப்பா அம்மாகிட்ட நான் சொல்றதைச் சொல்லுங்க”