”இதெல்லாம் குபேரனோட வேலை தன் பொண்ணை சரியாக்கறதை விட்டுட்டு வேற வீட்டு பொண்ணை கூட்டிட்டு வந்து இங்க விட்டிருக்காப்ல”
”எதுக்கு இப்படி செய்யனும், அந்தாளுக்கு என்ன புத்திக் கெட்டுப்போச்சாமா குத்துக்கல்லு போல ஜானகி இருக்கறப்ப இன்னொரு பொண்ணு எதுக்குங்கறேன்”
”அதேதான் நானும் சொன்னேன் யார் என் பேச்சைக் கேட்கறா” என வீரசிங்கம் சொல்ல மங்களமோ
”இதுல என்ன தப்பிருக்கு, ஜானகி எப்ப வேணும்னாலும் பெட்டியை தூக்கிக்கிட்டு மூர்த்தி மூர்த்தின்னு போயிட்டா, என் புள்ளை தனிமரமாயிடுவானே, அவனோட வாழ்க்கையே சூன்யமாயிடுமே, அதை எப்படி பெத்தவளா நான் பார்க்கறது, அதுக்குதான் ஜானகியை விட உசந்த ஒருத்தியை நான் பார்த்து வைச்சிட்டேன், இவள்தான் எங்க வீட்டு சின்ன மருமகள், ஜானகி இங்கிருந்து போனதும் என் புள்ளைக்கும் இவளுக்கும்தான் கல்யாணம் அன்னிக்கு வந்து கல்யாண விருந்து சாப்பிடுங்க இப்ப கிளம்புங்க” என சொல்ல அவ்வளவுதான் செல்வம் வாய்சண்டையில் இறங்கினார். அவருக்கு நிகராக மங்களம் பேச வீரசிங்கமோ தன் மனைவியை அடக்க முயன்று தோற்க வேங்கையனோ மூர்த்தி குடும்பத்திற்கு ஆதரவாக நிற்க மஹதியோ மங்களத்திற்கு துணையாக நிற்க ஜானகி பார்த்தாள். தானும் ஏதாவது செய்ய வேண்டுமே என நினைத்து காலியாக இருந்த வீரசிங்கத்திடம் வந்து அவருக்கு துணையாக பேச என அந்த இடமே களேபரமானது.
வாய் வலிக்க பேசி முடித்து ஓய்ந்தார்கள் அனைவரும். அதில் மூர்த்தியின் பெற்றோரோ அங்கிருந்து நகரவில்லை
”பார்க்கிறேன் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு, ஜானகிதான் இந்த வீட்டு மருமகள், அவளையும் வேங்கையனையும் ஒண்ணு சேர்த்தபின்னாடிதான் நாங்க இந்த வீட்டை விட்டு போவோம், அதுவரைக்கும் நாங்க இங்கதான் இருப்போம்” என சொல்லியவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றார்
பெரிய வீடு என்பதால் அறைகளுக்கு பஞ்சமில்லை, ஆளுக்கு ஒரு அறையில் தங்கிக்