”அப்படியெல்லாம் விடமுடியாது, நீ இங்கதான் இருக்கனும், இதுதான் உன்னோட வீடு, நீ மட்டும்தான் எங்க வீட்டு மருமகள்” என சொல்ல ஜானகி சோர்ந்துப் போனாள். அதைக்கேட்ட மங்களமோ தன் மகனிடம்
”என்ன வேங்கையா, வேடிக்கை பார்க்கற நான் என்ன சொன்னேன் உனக்கு, மறந்துட்டியா சின்ன மருமகள் கண்ல துளி கண்ணீர் வந்தா உன்னை தொலைச்சிடுவேன் பாரு, எப்படி அழறா பாரு, நம்மளை நம்பி வந்தவளை இப்படியா அழவைச்சி வேடிக்கைப் பார்க்கறது அவளை கூட்டிக்கிட்டு உன் ரூமுக்கு போ” என சொல்ல அவனோ மஹதியிடம் செல்ல ஜானகியோ
“இது என்ன கூத்தா இருக்கு, கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு பொண்ணும் பையனும் ஒரே ரூம்ல இருக்கலாமா” என கேட்க அதற்கு மங்களமோ
”என் பையன் மேல எனக்கு பூரண நம்பிக்கையிருக்கு, அவனை நம்பலாம் ஆனா, உன்னை நம்ப முடியாது, கல்யாணத்துக்கு முன்னாடி மூர்த்தி பின்னாடியே சுத்தினியே, நீ என்னென்ன செய்தியோ“
”தப்பா பேசாதீங்க அத்தை”
”நீ பேசினா தப்பில்லை, நான் பேசினா தப்பா முதல்ல அவளை விடு”
”முடியாது அத்தை” என சொல்ல மங்களம் தன் மகனைப் பார்த்து
”வேங்கை” என கர்ஜிக்க உடனே அவன் செயல்படத் தொடங்கினான். வீரசிங்கமோ
”வேங்கை நில்லு ஜானகி சொல்றதுதான் சரி, இந்த சின்ன மருமகள் நம்ம வீட்டுக்கு வேணாம், அவளை விரட்டிட்டு வா” என சொல்ல தயங்கி நின்றான் வேங்கையன் மங்களமோ
”என்னடா தயங்கற அவளை கூட்டிட்டு உன் ரூமுக்குப் போ” என சொல்ல திகைத்தான் வேங்கையன் தாய் ஒரு கட்டளையிட்டார் அதை நிறைவேற்றுவதா அல்லது தந்தை