”அய்யோ அத்தை அப்படி பேசாதீங்க அத்தை பாவம் அத்தை, அவங்க மேல தப்பேயில்லை, காதலிச்சது இன்னொருத்தரை, கல்யாணம் செய்துக்கிட்டது இவரை, எப்படி மனசுல வேறு ஒருத்தரை வைச்சிக்கிட்டு இவரோட பொய்யான வாழ்க்கையை வாழமுடியும் சொல்லுங்க”
என சொல்ல மங்களம் நீண்ட பெருமூச்சுவிட்டு
”சின்ன மருமகளே ஒண்ணு சொன்னா நீ தப்பா நினைக்க கூடாது”
”சொல்லுங்க அத்தை”
”ஜானகிக்கு மூர்த்தி ஏத்தவன் இல்லைம்மா” என சொல்ல அவள் மென்மையாக சிரித்து
”எனக்குத் தெரியும் அத்தை”
”சரி விடு ஆமா உன் அப்பா அம்மா யாரு எங்க இருக்காங்க உன்னை எப்படி அவங்க இங்க அனுப்பி வைச்சாங்க“ என கேட்க மஹதி குழம்பி வேங்கையனை பார்க்க அவனோ திருதிருவென விழித்தான். அதில் ஓரளவு புரிந்துக் கொண்ட மஹதியும்
”அதுவா அத்தை, என் ஊரு திருச்சி, என் அப்பா அம்மா அங்கதான் இருக்காங்க, என் அப்பா பள்ளி வாத்தியார் அம்மா உங்களை போல ஹவுஸ் ஒய்ப்”
”சரி உனக்கு குபேரன் குடும்பத்தை எப்படி தெரியும்”
”அதுவா குபேரனோட பொண்ணு ஜானகி எனக்கு அமைஞ்ச வரனை கெடுத்துவிட்டா”
”வரனா“
”ஆமாம் மூர்த்தியை எனக்காக பார்த்தாங்க, அதை ஜானகி கெடுத்துட்டா, அதுக்கு பிராயசித்தமா குபேரன் அங்கிள் என் வீட்டுக்கு வந்து என் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்தாரு, வேங்கையன் போல ஒரு நல்லவனை எங்க தேடினாலும்