(Reading time: 22 - 44 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”அன்பா நீங்க விஷத்தை கொடுத்தாகூட நான் மகிழ்ச்சியோட சாப்பிடுவேன் அத்தை” என்றாள் அதைக்கேட்டு பூரித்துப் போன மங்களமோ

  

”இரும்மா நான் உனக்கு கேசரி செஞ்சி கொண்டுவரேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் சென்றதும் வேங்கையனோ கலகலவென சிரித்தேவிட்டான் அவனின் சிரிப்பை கூட ரசித்தாள்

  

”எதுக்கு இந்தச் சிரிப்பு”

  

”ரொம்ப நல்லா நடிக்கற உன் நடிப்பை அப்படியே அம்மா நம்பறாங்க பாரு அதை பார்த்து சிரிப்பா வருது”

  

”எல்லா நேரத்திலயும் நடிச்சா அது நடிப்பு போல தெரியும், சில சமயம் உண்மையா நடந்துக்கிட்டாதான் வித்தியாசம் தெரியாது“

  

”அப்படியா அப்ப நீ இவ்ளோ நேரம் நடந்துக்கிட்டதுல எது நடிப்பு எது உண்மை” என கேட்க அவளோ மென்மையாக சிரித்துவிட்டு

  

”உங்களை போல ஒரு வெள்ளந்தியான மனுஷனை நான் பார்த்ததில்லை, எந்த பொண்ணுக்கும் உங்களை பிடிச்சி போயிடும்“

  

”நீதான் சொல்லிக்கனும் ஜானகிக்கே என்னை பிடிக்கலையே”

  

”அவள் மூர்த்தியை நினைச்சதாலதானே உங்களை பிடிக்கலைன்னு சொன்னா, ஒருவேளை மூர்ததி அவள் வாழ்க்கையை விட்டு போயிட்டா, அப்போ அவளோட கவனம் உங்க பக்கம் திரும்பும்“

  

”அதுக்கு என்ன செய்றது”

  

”உங்களால முடிஞ்சா மூர்த்தியை இந்த வீட்ல ஒரு மாசத்துக்கு தங்க வைக்க முடியுமா”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.