(Reading time: 22 - 44 minutes)
Chinna marumagal
Chinna marumagal

போனது. மூர்த்தியின் பெற்றோரோ தடாலடியாக உள்ளே நுழைய வீரசிங்கம் தடுத்தார்

  

”என்ன ஒரு தகவல் கூட சொல்லாம திடுதிப்புன்னு வீட்டுக்கு வந்திருக்கீங்க, என்ன விசயம்” என கேட்க அதற்கு மூர்த்தியின் தந்தை செல்வமோ

  

”சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்றதுக்கு கூட தகவல் சொல்லனுமாக்கும்”

  

”அப்படியில்லை திடீர்ன்னு வந்தீங்களே என்ன ஏதாவது பிரச்சனையான்னு கேட்டேன்“

  

”பிரச்சனையா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்க வீட்ல புதுசா விருந்தாளி வந்திருக்காங்களாமே அதான் ஒரு எட்டுப் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என சொல்லியவர் மஹதியை ஏற இறங்கப் பார்க்க அதைக்கண்ட வீரசிங்கமோ மஹதியிடம்

  

”ஏய் பொண்ணே எதுக்கு வெளிய வந்து நிக்கற போ உள்ள போ” என விரட்ட அவளோ பயப்படுவது போல நடுங்க மங்களம் உடனே பேசினார்

  

”எதுக்கு அவளை பயமுறுத்தறீங்க, அவள் ஏன் உள்ள போகனும் அவள் இந்த வீட்டு சின்ன மருமகள்” என சொல்ல செல்வமோ

  

”என்னது சின்ன மருமகளா, அது எந்த உறவுமுறையிலன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா“

  

”அது இருக்கட்டும் நீங்க எதுக்காக இங்க வந்தீங்க அதை சொல்லுங்க முதல்ல” என வீரசிங்கம் கேட்க அதற்கு மூர்த்தியின் தந்தை செல்வமோ

  

”நாங்க வேங்கையனுக்காக வந்திருக்கோம், அவனுக்கு ஒரு கெடுதல் நடக்குது அது தெரிஞ்சும் சும்மா நின்னு வேடிக்கை பார்க்க நாங்க என்ன வெளியாளுங்களா, சொந்தக்காரங்க, நாளைக்கே யாராவது எங்களை தப்பா பேசிடக்கூடாதுல்ல அதான் என்ன ஏதுன்னு பார்க்க வந்தோம், இங்க வந்த பின்னாடி பிரச்சனை ரொம்ப பெரிசால தெரியுது ஆமா இந்தப் பொண்ணு யாரு? எதுக்காக இங்க வந்திருக்கா” என கேட்க வீரசிங்கமோ

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.