சொன்னதை செய்வதா என திகைத்தவன், மஹதியை பார்க்க அவளோ கண்களால் சைகை செய்து வா என அழைக்க வேங்கையன் ஒரு நொடி கண்கள்மூடி திறந்து தாய் சொன்னதை செய்ய எண்ணி நேராக மஹதியிடம் சென்று அவளின் கையை பற்ற, ஜானகியோ முறைக்க அதைப்பற்றி கண்டுக் கொள்ளாமல் மஹதியை அழைத்துக் கொண்டு அவன் அறை நோக்கி நடக்க முன்னால் வந்து கோபத்துடன் நின்ற வீரசிங்கமோ
”என்னை தாண்டி உன்னால உள்ள போக முடியுமா” என கர்ஜிக்க வேங்கையன் திரும்பி தன் தாயைப் பார்த்தான் அவரோ
”தைரியமா நீ உள்ள போ நான் இருக்கேன் உனக்கு” என சொல்ல அதில் அவனும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மஹதியை அழைத்துக் கொண்டு அறைக்குள் செல்ல வீரசிங்கம் அதிர்ந்துப் போனார்.
தன் மகன் தன் பேச்சை மதிக்கவில்லையே என்ற கவலையில் ஒரு இடமாக அமர்ந்துவிட மங்களமோ நிம்மதி பெருமூச்சுவிட்டு சமைக்கச் சென்றார்.
ஜானகியோ எப்படியோ நாம் அருமையாக நடித்துவிட்டோம், அனைவருக்கும் நம்மேல் சந்தேகம் வரவில்லை என நினைத்து மகிழ்ச்சியுடன் தன் அறைக்குச் சென்றாள்.
வேங்கையனோ மஹதியை தன் அறைக்குள் அழைத்து வந்து விட்டு அவளிடம்
”ஜானகி ஏன் இப்படி நடந்துக்கறா”
”அவளுக்கு நான் ட்ராமா செய்றேன்னு தெரியாது, நிஜமாவே அவளுக்கு சக்காளத்தியா நான் வந்துட்டேன்னு நினைச்சி இப்படி நடந்துக்கறா” என சொல்ல அவன் முகமோ மத்தாப்பூவாய் மலர்ந்தது
”எனக்கு தெரியும் அவள் மனசுல ஏதோ ஒரு இடத்தில நான் இருக்கேன்” என சொல்ல மஹதி நொந்துப் போனாள்
”ரொம்ப ஆசைவைக்காதீங்க, நடந்த சின்ன விசயத்தை வைச்சி அவளை நீங்க நம்பிடாதீங்க