(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

கொண்டிருந்தார்கள்.

  

🌼🌸❀✿🌷

   

ப்புறம் ஏன் இது எதையுமே கோர்ட்ல காமிக்கலை விஷ்வக்?” தென்றல்வாணன் குரலில் கோபம் இருந்தது.

  

“ஒண்ணுமே செய்ய முடியலை இன்ஸ்பெக்டர். என் கையை கட்டிப் போட்டுட்டாங்க. அஹல்யாக்கு ஹெல்ப் செய்யனும்னு என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாம் செய்தேன். என் மேலதிகாரிங்க, பிராசிக்யூட்டர் எல்லோரும் கௌரவ்க்கு சப்போர்ட். கேஸ் முடிஞ்சப்புறம் அஹல்யா சூசைட் அட்டம்ப்ட் செய்ததா கேள்விப்பட்டேன். நான் அப்போ வேற கேஸ்ல பிஸியா இருந்தேன். முடிச்சுட்டு போய் பேசினப்போ, அஹல்யா ஹாஸ்பிட்டல்ல இருந்து தேட வேண்டாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு, பக்கத்து வார்ட்ல அந்த நேரத்துல இறந்தவங்களோட குழந்தையோட அங்கே இருந்து போயிட்டதா அவளோட அக்கா சொன்னா!”

  

“டிஸ்கஸ்டிங்! சாரி விஷ்வக்!”

  

“எனக்கும் அதே உணர்வு தான் இன்ஸ்பெக்டர். என்ன செய்றது? எனக்கு தனிப்பட்ட முறையில தெரிஞ்ச வரைக்கும் அஹல்யா நல்ல பொண்ணு. இந்த கேஸை அடித்தளமா வச்சு உங்க கேஸை விசாரிக்காதீங்க. ப்ளீஸ்!”

  

ஃபோனை மீண்டும் பாக்கெட்டினுள் வைத்தப் போது விஷ்வக்குடன் பேசிய காதுகள் எரிவதுப் போல உணர்ந்தான் தென்றல்வாணன்.

  

அஹல்யாவை சந்தேகப் பட்டதற்காக வருத்தப் பட்டான். அவன் அவனுடைய வேலையை தான் செய்தான்! அதை தவிர்த்திருக்க முடியாது! ஆனால் இந்த பழைய கேஸ் விபரம் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளலாம். அஹல்யாவிற்கு இதனால் திரும்ப தொல்லை வரக் கூடாது!

  

சேகரன் வழக்கை வேறு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டுமோ? தீவிரமாக யோசித்தான் தென்றல்வாணன்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.