முதல் முறை அவர்களின் வெறுப்பை பார்ப்பதால் சற்று அதிகமாகவே பயந்திருந்தாள், எங்கே இதையே காரணம் காட்டி மூர்த்தியை தன்னுடன் சேரவிடாமல் செய்துவிடுவார்களோ என பயந்தாள். அதனால் அவர்களிடம்
”சரிங்கத்தை நானே உங்களுக்கு சேர்த்து சமைக்கிறேன் போதுமா“
”எங்களுக்கு என்ன பிடிக்கும்னு உனக்குத் தெரியுமா”
”மூர்த்தி மாமா சாப்பிடறதைதானே நீங்களும் சாப்பிடுவீங்க”
”இல்லையே அவனுக்குப் பிடிச்சது எங்களுக்கு பிடிக்காது இதுகூடவா உனக்குத் தெரியலை”
”சத்தியமா தெரியாது அத்தை சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன சமைக்கனும்“ என கேட்க உடனே பரிமளாவோ பெரிய லிஸ்ட் படித்தார்
”சாதம் விறகடுப்பிலதான் சமைக்கனும் அப்பதான் ருசியா மணமா இருக்கும்”
”எதுக்கு அத்தை அதான் கேஸ் அடுப்பு இருக்குல்ல”
”எங்க வீட்ல விறகடுப்பிலதான் செய்வோம் பழகிக்க”
”சரிங்க அத்தை அப்புறம்”
”குழம்பு செய்றதாயிருந்தா கூட மிளகாய் பொடி அரைச்சதை நாங்க பயன்படுத்த மாட்டோம், புதுசா அம்மியில அரைச்சிதான் குழம்புல ஊத்துவோம், அப்பதான் ருசியா இருக்கும் மூர்த்திக்கும் இப்படி செய்தாதான் பிடிக்கும்”
”அய்யோ நான் அரைச்ச வைச்சிருந்த மிளகாய் பொடியிலதானே குழம்பு வைச்சேன், அப்ப அதை மூர்த்தி மாமா சாப்பிட மாட்டாரா“