(Reading time: 24 - 48 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன் போதுமா”

  

”கூடவே தாளாளர் கிட்ட பேச்சு வைச்சிக்காத, நீ அவர்கூட பேசினாலே சண்டையாயிடுது அப்புறம் அவரோட கோபத்தை நான்தான் குறைக்க படாதபாடு படனும்”

  

”சரிடி சரி நீ என்ன சொல்றியோ அதையே செய்றேன் போதுமா”

  

“போதும்டி இதுவே போதும் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு” என சொல்ல கண்ணகியும் மாதவியின் நிலைமையை நினைத்து பரிதாபமேபட்டாள்

  

அடுத்த நாளில் இருந்து கண்ணகி எந்த பிரச்சனையும் செய்யவில்லை அமைதியாக இருந்தாள், கோவலன் வந்து பேசினாலும் சண்டை போடாமல் அமைதியாக பேசி முடித்தாள், அதுவே அவனுக்கு வியப்பாக இருந்தது. வெள்ளி முடிந்து சனிக்கிழமை வந்தது

  

”கண்ணகி உனக்கு நம்பிக்கையிருக்கா கண்டிப்பா மாணவர்கள் இன்னிக்கு வருவாங்களா”

  

”இன்னிக்கு மட்டும் அவங்க வந்துட்டா நாளைக்கும் வருவாங்க எனக்கு நம்பிக்கையிருக்கு பார்க்கலாம்”

  

”இதப்பாரு நீ நினைச்சது நடக்கலைன்னா அதுக்காக வருத்தப்படகூடாது”

  

”இதுல வருத்தப்பட என்ன இருக்கு, நான் என் கடமையை செய்தேன் அதை மதிச்சி நடந்தா அவங்களுக்கு நல்லது அவ்ளோதான் சரி நான் கிளம்பறேன் நேரமாகுது”

  

”எப்படியும் யாரும் வரமாட்டாங்க ஆளே இல்லாத கடைக்கு யாருக்குடி நீ டீ ஆத்தப்போற” என சொல்ல அவளோ சிரித்துக் கொண்டே

  

”தாளாளர் வருவாப்ல அவருக்கு வேணா டீ ஆத்தறேன்” என சொல்ல மாதவிக்கு சிரிப்பாக இருந்தது

  

”சரிடி வா உன்னை ட்ராப் பண்றேன்” என சொல்லி கண்ணகியை அழைத்துக் கொண்டு மாதவி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.