“அது அப்படித்தான், சரி சரி நீ கிளம்பு வெளியாளுங்க யாரும் சம்பந்தமில்லாம காலேஜ்ல இருக்க கூடாது”
“ஓ இது உன்னோட புது சட்டமா”
”ஆமாம் நீ வந்த மாதிரி மத்தவங்களும் யாரையாவது கூட்டிட்டு வந்திடக்கூடாது பாரு அதான்” என சொல்ல மாதவியோ சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்ப அதை சிலம்பரசன் பார்த்துவிட்டான்
”இவளை நான் கோவலனோட கம்பெனியில பார்த்திருக்கேன், இங்க இருக்கா அதுவும் இவள்கூட சிரிச்சி பேசிட்டுப் போறாளே, என்னவாயிருக்கும் கண்டுபிடிக்கிறேன் கண்டுபிடிச்சி இவளைபத்தியும் அவளை பத்தியும் கோவலன்கிட்ட சொல்லனும்” என மனதில் நினைத்துக் கொண்டு அப்போது இருந்தே மாதவியை கண்காணிக்கலானான்.
கோவலனுக்கு ஒரே ஆர்வம் நிச்சயம் கண்ணகி சொன்னது போல மாணவர்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள், அதனால் அவளிடம் சென்று அவளை வெறுப்பேற்றி கேலி செய்து அழவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்லூரிக்கு வந்தான், ஆனால் அங்கு கல்லூரி நடந்துக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ந்தான், அவனால் எதையும் நம்ப இயலவில்லை கண்ணகியை அழவைக்க நினைத்து வந்தவன் கல்லூரி இந்தளவு மாறிவிட்டதை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தான். அவனது கண்ணீரை கண்டபடி வந்த கண்ணகியோ
”நன்றி சார்” என்றாள் உடனே அவன்
”எதுக்கு”
”உங்க கண்ணீரே எனக்கு சொல்லுது வாய்திறந்து நீங்க சொல்லனும்னு அவசியம் இல்லை”
”உளறாத“
”காலேஜ் நடக்கறதை பார்த்து என்னோட செயலை பாராட்ட நினைச்சீங்கள்ல, எப்படியும்