எங்களுக்கு என்ன உன்னைப் போல 3 மடங்கு சொத்தா இருக்கு, நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்தை இப்படி தண்ணியாட்டம் செலவு செய்தா எப்படி? நாள் முழுக்க வெயில்ல நின்னு வேலைப் பார்க்கிறேன், நான்கூட என் தேவைக்குன்னு எதையும் அநாவசியமா செலவு செஞ்சிக்கிட்டதில்லை, வீட்டுக்குள்ளயே இருக்கற உனக்கு இவ்வளவு தேவைப்படுதா”
”எல்லாத்துக்கும் கணக்குப் பார்த்தா எப்படியாம், பொம்பளைங்க தேவைக்கும் ஆம்பளைங்க தேவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்குல்ல”
”வர்ற வருமானத்தில சிக்கனம் பிடிச்சி செலவு செய்ய தெரியாதா உனக்கு, இப்படியே போனா நான் கடன்தான் வாங்கனும் போல இருக்கு“
”ப்ச் இப்ப என்னாச்சின்னு சும்மா குதிக்கற”
”இதப்பாரு நான் சம்பாதிக்கற பணத்தில வீட்டு செலவுகளுக்குதான் இனி பணம் தருவேன், ஏதோ நீ என் புருஷன்ங்கறதால உன்னோட செலவுக்கு பணம் தரேன், அதுவும் அதிகமா இல்லை தேவையான அளவுக்குதான் தருவேன், அதுக்காக உன்னோட நண்பனுக்கு நீ வளர்க்கற நாய்க்கு எல்லாம் நீதான் பணம் செலவு செய்யனும், நான்லாம் பத்து பைசா தரமாட்டேன்”
”இப்படி சொன்னா எப்படி அவங்க என்னை நம்பி இங்க வந்தாங்க அவங்களை நாமதானே பார்த்துக்கனும்”
“இது ஒண்ணும் சத்திரம் சாவடி கிடையாது, அவங்க வந்தது உனக்காக நானா அவங்களை இங்க தங்க அனுமதி தந்தேன்”
”இப்ப என்னதான் சொல்ல வர்ற”
”நான் சொன்னது சொன்னதுதான், வீட்டு தேவைக்கு உனக்கு இதுக்கு மட்டும்தான் என்னால பணம் தரமுடியும், இத்தனை நாளும் எங்கப்பாவை ஏமாத்தி நீயும் உன் நண்பனுக்கு உன் நாய்க்குன்னு நிறைய பணத்தை செலவு செய்துட்ட, இனிமேல அப்படி செலவு செய்ய