(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

முடியாது, செய்யவும் விடமாட்டேன், அப்பாகிட்ட வீட்டு நிர்வாகம் கொடுத்தது தப்பா போச்சி, இனி பண விசயத்தை நானே பார்த்துக்கிறேன், இனிமேல ஒவ்வொரு செலவுக்கும் நீ என்கிட்ட வந்து நின்னு பணம் வாங்கிக்க அப்பாகிட்ட போக வேணாம்” என சொல்ல அவனோ அதிர்ந்தான்

  

”அப்போ என் நண்பனுக்கு நாய்க்கு தேவையானதை எப்படி தர்றது”

  

”வேலைக்கு போ”

  

”வேலைக்கா”

  

”ஆமாம் உனக்கு பணம் தேவைன்னா வேலைக்குப் போய் சம்பாதிச்சி கொண்டு வா”

  

”அதெப்படி முடியும் வீட்டு வேலைகள் அம்புட்டு இருக்கு, இதுல நான் வெளிய வேலைக்கு போய் வந்தா வீட்டு வேலைகளை யார் செய்வா”

  

”அது உன்னோட பிரச்சனை எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை”

  

”இப்படி சுயநலமா பேசினா எப்படி”

  

”இதப்பாரு தோப்புல பெரிசா லாபம் வரலை விவசாயம் கொஞ்சம் மந்தமா இருக்கு”

  

”அதுக்கு எங்களை பட்டினி போடுவியா”

  

”இருக்கறதை வைச்சி வீட்டை நடத்த சொல்றேன், முதல்ல அந்த நாயை கொண்டு போய் எங்கயாவது விடு அது சாப்பாட்டுக்கே ஆயிரக்கணக்குல செலவு ஆகுது”

  

”அந்த நாய் உனக்கு என்ன பாவம் செய்தது, அது பாட்டுக்கு வீட்டுக்கு காவலா இருக்கு”

  

”அது காவலா அதான் நீயிருக்கியே ஒரு வீட்டுக்கு ஒண்ணு போதும்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.