”சே உன்கிட்ட போய் கருணையை எதிர்பார்த்தேனே”
”பார்க்காத நானா கேட்டேன், இதப்பாரு அடுத்த மாச வரவு செலவு சரியா இருக்கனும் தேவையில்லாத விசயத்துக்கு பணத்தை செலவு செஞ்சது தெரிஞ்சது உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் ஜாக்கிரதை” என திட்டிவிட்டு சென்றுவிட அவனுக்கு கலக்கமாக இருந்தது.
அவள் பேசியது கணக்குபிள்ளைக்கே கேட்டது அவன் மெதுவாக கொம்பனிடம்
”கொம்பா நான் வேணா இங்கிருந்து போயிடறேன்டா, என்னால உனக்கு எதுக்கு கஷ்டம் நாயை நானே பார்த்துக்கிறேன், உன் அம்மா வீட்ல நானும் நாயும் இருந்துக்கறோம்”
”டேய் சும்மாயிருடா, அவளோட எண்ணமே வேற, எனக்குன்னு நீயிருக்க நீயும் இல்லைன்னா நான் அநாதையாயிடுவேன், இன்னும் என்னை கஷ்டப்படுத்தி பார்க்கனும்னு ஆசைப்படறா, அது தெரியலை உனக்கு”
”புரியுதுடா பேசாம நான் வேலைக்கு போய் பணம் கொண்டாந்து அவள்கிட்ட கொடுக்கிறேன், அப்ப அவள் எதுவும் சொல்லமாட்டா, என்னோட தேவைக்கும் நாய்க்கான சாப்பாடும் என்னோட செலவா இருக்கட்டும்”
”வேலைக்கா நீயா”
”உங்கப்பாகிட்ட போய் வேலைக்கு சேர்றேன் அவரும் எனக்கு வேலை தருவாரு நண்பா”
”இருடா என்னை நம்பி நீ வந்திருக்க, உன்னை வேலைக்கு அனுப்ப எனக்கு மனசு வரலை நானே வேலைக்குப் போறேன்“
”யார்கிட்ட போவ உன் அப்பாகிட்டயா”
”இல்லை அப்பாகிட்ட போனா காவேரி ஒத்துக்க மாட்டா”