(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”என்ன வேலையோ என்னவோ, சரி சரி நான் எதுக்கு உன்னை கூப்பிட்டேன்னா மாசம் பொறந்துடுச்சி, இதுவரைக்கும் நான் வீட்டு வரவு செலவு கணக்குகளை பார்த்ததில்லை, அப்பாவே அதை பார்த்துக்கிட்டாரு ஆனா இப்ப அப்படியில்லை நானே இருந்து பார்க்கலாம்னு இருக்கேன் அதனால போன மாசத்துக்கான வரவு செலவு கணக்குகளை கொண்டு வந்து காட்டு”

  

”இதுக்கு ஏன் என்னை கூப்பிட்ட கணக்குபிள்ளையை கேட்டா கொண்டு வந்து கொடுக்கப் போறேன்”

  

”ஏன் துரை போய் கொண்டு வரமாட்டீங்களோ, போ கொண்டா” என்றாள் சிடுசிடுவென்று அப்போதே அவனுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என புரிந்துக் கொண்டு மனதுள் புலம்பிக் கொண்டே கணக்குப்பிள்ளையை பார்த்து விசயத்தை கூற

  

”இப்ப எதுக்கு கணக்குகளை கேட்கறா, இதை வைச்சி எப்படி உன்னை கஷ்டப்படுத்தலாம்னு திட்டம் போடறாளா”

  

”ஆமா அவளுக்கு வேற என்னடா வேலை, ஒவ்வொரு நாளும் பொழுது விடிஞ்சி பொழுது போனா என்னை அவமானப்படுத்தாம இருந்திருக்காளா, அதுக்குன்னே யோசிச்சி யோசிச்சி டிசைன் டிசைனா என்னை கஷ்டப்படுத்தறா, இன்னிக்கும் அதான் நடக்கப் போகுது வா வா” என சொல்ல அவனும் உடன் வந்தான்.

  

காவேரி ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்க அவளின் முன் வந்து நின்றார்கள் கொம்பனும் கணக்குபிள்ளையும்

  

”அண்ணா நீங்க என்ன இங்க, எல்லாம் கொம்பன்கிட்ட நான் கேட்டுக்கிறேன் நீங்க போய் மத்த வேலைகளை பாருங்க” என சொல்ல கணக்குபிள்ளையோ அதிர்ந்து கொம்பனைப் பார்த்து

  

”நண்பா இன்னிக்கு நீ வசமா மாட்டிக்கிட்ட உன்னை காப்பாத்த கூட என்னால முடியாது

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.