(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

என்னை மன்னிச்சிடு நண்பா”

  

”விடு விடு நான் பார்த்துக்கிறேன் நீ போ” என சொல்ல அவனும் மனமின்றியே அங்கிருந்து சென்றாலும் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

  

கொம்பனும் வரவு செலவு புத்தகத்தை காவேரியிடம் நீட்ட அவளும் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள், போன மாத செலவு கணக்கு நிறைய இருக்கவும் அதிர்ந்தாள்

  

“”என்ன இவ்ளோ செலவா? இது எப்படி? வீட்டுல இவ்வளவு செலவு இருக்காதே நம்ப முடியலையே” என சத்தம் போட அவனோ

  

”வீடுன்னா ஆயிரம் செலவு இருக்கத்தான் செய்யும் இதுவே சிக்கனமா செய்த செலவுகள்தான், இதுக்கே கத்தினா எப்படி, நிஜமான செலவுகளை பார்த்தா என்ன சொல்வ”

  

”நானும் எங்கப்பாவும் மட்டுமே இருந்தப்ப இவ்ளோ செலவு வந்ததில்லையே”

  

”ஆமா 2 பேர் இருந்தப்ப விட இப்ப 4 பேர் இருக்கோம்ல அப்ப செலவு கூடதான் செய்யும் இதுக்கும் சத்தம் போட்டா எப்படி” என சொல்ல அவளோ கோபத்துடன் என்னென்ன செலவுகள் என பார்க்கலானாள்

  

”வீட்டு செலவுகள் கூட இது என்ன செலவுகள்” என அவனிடம் காட்ட அதைக்கண்டவன்

  

“ஏம்மா ஆம்பளைங்க எங்களுக்குன்னு சில தேவைகள் இருக்கும் அதுக்கு பணம் வேணாமா”

  

”அதுக்கு வீட்டு பணத்தில இருந்து எடுத்து செலவு செய்வீங்களா“

  

”வேற என்ன செய்றது நானா சம்பாதிக்கிறேன் செலவு செய்றதுக்கு”

  

”கொஞ்சம் கூட சிக்கனமே இல்லை, இது என்ன உங்க அம்மா வீடுன்னு நினைச்சியா, அங்கன்னா தாம்தூம்ன்னு செலவு செய்த, அதே போல இங்கயும் செய்தா எப்படி,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.