(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இல்லை பவி...” கண்களை நிமிர்த்தாமலே பதில் சொன்னாள் பாரதி.

  

குட்... இந்த பேபரை எல்லாம் கொஞ்சம் நேரம் மூடி வை. நாம இரண்டு பேரும் பேசியே ரொம்ப நாள் ஆச்சு...” என்று சொல்லி தோழியின் கையில் இருந்த பேப்பரை எடுத்து மடித்து வைத்தாள் பவித்ரா.

  

ஹேய் பவி, மீரா மேடம் கிட்ட இன்னைக்கே முடிச்சு தரேன்னு சொல்லி இருக்கேன்... ப்ளீஸ்ப்பா... ஒரு ஒன் அண்ட் ஹாஃப் ஹவர் தான் ஆகும்...”

  

அதுக்குள்ளே நான் கிளம்புற நேரம் வந்திரும்... அவங்களுக்கு ஹெல்ப் தானே செய்ற, காலையிலே கொடுத்தா போதும்... இப்படி ஓவரா ஃபிலிம் காட்டாதே, என்னோட பேச பிடிக்கலைன்னா நீ நேராவே சொல்லலாம்...”

  

என்ன பவி நீ? சொல்லு, என்ன விஷயம்? அண்ணாக்கு பர்த் டே கிஃப்ட் வாங்க ஐடியா யோசிக்கனுமா? ஆனால் அண்ணா பர்த்டேக்கு இன்னமும் ஒரு மாசம் மேல இருக்கே?”

  

யோசனையுடன் கேள்விகளை அடுக்கிய பாரதியை நேராக ஒருப் பார்வை பார்த்தாள் பவித்ரா. பாரதியின் முகத்தில் கடந்த சில மாதங்களாக இருந்த மலர்ச்சி காணாமல் போயிருந்தது...

  

என்ன ஆகி விட்டது இவளுக்கு, என்ற கேள்வியுடனே,

   

அதெல்லாம் மெதுவா யோசிக்கலாம் பாரு, அவசரமில்லை... நீ சொல்லு... என்ன விஷயம், இப்போ எல்லாம் உன்னோட பேசவே முடியலை?” என்று வினவினாள்!

  

அதெல்லாம் எதுவுமில்லை பவி... அஸ் யூஷ்வல் எக்ஸாம் டைம்ல கொஞ்சம் ஹெல்ப் செய்யலாம்னு நினைச்சேன்...”

  

எல்லா வருஷமும் நீ செய்றது தானே? அது என்ன இந்த வருஷம் மட்டும் லஞ்ச் டைம் தொடங்கி, எல்லா நேரத்திலேயும் நீ அவ்வளவு பிஸி???

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.