(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நீ சொன்னதைக் கேட்டு நான் வேற என்ன சொல்றது?”

  

எக்ஸாம் சீட்டிங் அரேஞ்ச்மென்ட், ரூம் அரேஞ்ச்மென்ட், சுபர்வைசர் அல்லாட்மென்ட் இப்படி எத்தனையோ இருக்கே... அதை தவிர ப்ராக்டிகல்ஸ்க்கு லேப் எல்லாம் ரெடி செய்யனும்...“

  

எல்லாத்தையும் பாரதி தானா செய்றா? சப்போர்ட் ஸ்டாஃப் இல்லையா?”

  

இருக்காங்க, அண்ணி சுப்பர்வைஸ் செய்றாங்க... எப்போதும் அண்ணி தான் இந்த மாதிரி எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் செய்வாங்க... இந்த செமஸ்டர்ல தான் கொஞ்சம் இன்டிரஸ்ட் இல்லாமல் இருந்தாங்க... பசங்க எல்லாம் கூட கிண்டல் செய்துட்டு இருந்தாங்க... அண்ணன் அந்த பக்கம் பிஸி ஆனாரோ இல்லையோ, அண்ணி இப்போ பழைய மாதிரி எல்லாம் எடுத்து செய்ய ஆரம்பிச்சிட்டாங்க...”

  

மகள் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கற்பகத்திற்கு மீண்டும் மனதில் குற்ற உணர்வு எழுந்தது!

  

விவேக் அவள் முன்னிலையில் பாரதியை அறைந்ததற்குப் பிறகு அந்த வீட்டில் எல்லாமே மாறிப் போயிருந்தது... முன்பு மரியாதை நிமித்தமாக என்று ஒன்றிரண்டு வார்த்தைகளாவது அவளிடம் பேசிய பாரதி, இப்போதெல்லாம் கற்பகத்தை கண்டாலே ஒதுங்கிப் போனாள். கற்பகத்தால் பாரதியின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது. திருமணமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆன போதும், கணவனின் சிறு கோபம் கூட அவளை இப்போதும் பெரிய அளவில் பாதிப்பது வழக்கம்... பாரதிக்கும் விவேக்கிற்கும் திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை... விவேக் கோபப் பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை... அப்படி அத்தனை பேர் முன் கன்னத்தில் அடித்தால்... பாரதியால் எப்படி அதை தாங்கிக் கொள்ள முடியும்? விவேக் நடந்துக் கொண்ட முறைக்கு பாரதி வீட்டை இரண்டாக்காமல் இருப்பது பெரிய விஷயமே... அதுவே அவளின் குணத்தையும் எடுத்துக் காட்டியது... பாவம்... என்ன இருந்தாலும் பாரதியும் சிறு பெண் தானே? அவளுக்கு துணையாக இருக்க பெற்றவர்களும் கூட இப்போது இல்லை...!

  

விவேக்கிடம் இதைப் பற்றி ஒன்றிரண்டு முறைப் பேச முயன்றாள் கற்பகம். ஆனால் அவன்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.