(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

எல்லோரையும் அழைச்சிட்டு வா பவி...”

  

சரி...” என்றாள் பவித்ரா ஆர்வமே இல்லாமல்!

  

🌼🌸❀✿🌷

   

ழக்கத்திற்கு மாறாக இரவு உணவு நேரத்தில் மிக அமைதியாக இருந்த தன் குடும்பத்தினரை ஆச்சர்யமாகப் பார்த்தார் நரேந்திரன். கடந்த ஒரு சில நாட்களாகவே இப்படி தான். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், அதற்கு மேல் பொறுமை இல்லாமல்,

  

என்ன ரஞ்சன், உங்க அம்மா சாப்பிடும் போது பேசக் கூடாதுன்னு ஏதாவது புதுசா தடை உத்தரவு போட்டு இருக்காளா என்ன? இப்படி எக்ஸாம் ஹால் போல டைனிங் ஹால் அமைதியா இருக்கு...” என மனதிலிருந்ததை கேள்வியாகவே கேட்டார்!

  

அதெல்லாம் ஒன்னும் இல்லை அப்பா...” என்றான் நிரஞ்சன் மெல்லியக் குரலில்.

  

சின்ன அண்ணா இங்கே இல்லையே அப்பா அது தான் உங்களுக்கு வீடு டல்லா தெரியுது...” என்றாள் மது!

  

அட ஆமாம் மது கண்ணா, விவேக் இருந்தால் கலகலன்னு தான் இருக்கும். ஆமாம் எங்கே உங்க அண்ணன், அண்ணி இரண்டுப் பேரையும் கொஞ்ச நாளா பார்க்கவே முடியுறது இல்லை?”

  

அண்ணன் வழக்கம் போல வேலையில் பிஸி... பாரதி அண்ணி செமெஸ்டர் வர போகுதுல, அதுக்கு ப்ரிபரேஷன்ல பிஸியா இருக்காங்க...”

  

எக்ஸாம் வந்தா ஸ்டுடண்ட்ஸ் ப்ரிபேர் செய்யனும் சரி, அது என்ன லெக்சரர் பிரிப்பேர் செய்றது? க்வெஸ்ட்டியன் பேப்பர் எல்லாம் யுனிவர்சிட்டியில் இருந்து தானே வரும்?“

  

எப்படி அப்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் டவுட் வருது?” என்றாள் மது சிரிப்புடன்!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.