(Reading time: 24 - 47 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

போகுது, நாங்க செஞ்சது தப்புதான் எங்களை மன்னிச்சி ஒரு வாய்ப்பு கொடுங்க” என கெஞ்ச ஈஸ்வரமூர்த்தி கண்ணகியைப் பார்க்க கண்ணகியோ மனம் இரங்கி சரியென கூற அதில் அவர் இளம் வயதினரை மட்டும் அனுப்பிவிட்டு சற்று நடுத்தர வயதை தாண்டிய ஆசிரியர்களை மறுபடியும் வேலையில் நியமித்தார்

  

”இதப்பாருங்க நமக்கு நாள் குறைவா இருக்கு, அதுக்குள்ள உங்களால பாடம் எடுக்க முடியாது முக்கியமான கேள்விகள் எதுவோ அதை மட்டும் பாடமா எடுத்து மாணவர்களை படிக்க வைங்க, படிக்காத மாணவர்களை அடிங்க திட்டுங்க கண்டிங்க தண்டனை கொடுங்க அவங்க பெற்றோர்களை கூட கூப்பிடுங்க வார்ன் பண்ணுங்க தப்பில்லை” என சொல்ல ஆசிரியர் ஒருவரோ

  

”இது தப்பாச்சே மாணவர்கள் மேல கை வைக்க கூடாதே”

  

”அது பள்ளி கூட மாணவர்களுக்குதான், கல்லூரி மாணவர்களை அடிக்க கூடாதுன்னு சட்டம் சொல்லலை, அதனால அடிச்சாவது அவங்களை படிக்க வைங்க, அதையும் மீறி யாராவது எதிர்த்து நின்னா என்கிட்ட சொல்லுங்க, அடுத்த நிமிஷமே அந்த மாணவனுக்கு நான் டிசி கொடுத்துடறேன்” என சொல்ல மாணவர்கள் அரண்டார்கள்

  

கண்ணகி மாணவர்களைப் பார்த்து

  

”புது ஆசிரியர்களை நான் நியமிக்கறேன் வர்றவங்ககிட்ட உங்களோட விளையாட்டுத்தனத்தை காட்டிடாதீங்க, அப்படி காட்டினா உங்களுக்குதான் இழப்பு, உங்க பெற்றோர்களை வரவழைச்சி நீங்க செய்த தப்புக்களை எடுத்துச் சொல்வோம், நிறைய பணம் கட்டிதானே உங்களை இங்க படிக்க வைக்கறாங்க, அதனால பணம் வீணா போச்சேன்னு உங்க பெற்றோர்கள் உங்க மேல கோபப்படுவாங்க, அது உங்களுக்கு நல்லதில்லை அதனால வெட்டியா பொழுது ஓட்டாம போய் ஒழுங்கா படிக்கற வேலையைப் பாருங்க

  

இந்த முறை வர்ற செமஸ்டர்ல நீங்க யாராவது பெயில் ஆனீங்கன்னா கண்டிப்பா நான் அவங்களுக்கு டிசி கொடுத்துடுவேன், அதுக்கு அப்புறம் யாராலயும் வேற கல்லூரியில படிக்க முடியாது, அதோட அவங்களோட படிப்பு முடிஞ்சது, அந்த தூரம் வரைக்கும் நீங்க போக மாட்டீங்கன்னு நம்பறேன் புரியுதா” என சொல்ல மாணவர்கள் உடனே தலையை ஆம் என்பது

2 comments

  • தயவுசெய்து, ஹீரோ புது வாத்தியாராக வேலைக்கு வரப்போறானு கதைய மாத்திடாதீங்க

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.