“இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்த”
”ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன்”
“அப்புறம் ஏன் இங்க வந்த“
”அந்த கம்பெனி முதலாளி சரியில்லை சுயநலவாதி அங்க இருந்தா எனக்கு கஷ்டம் வரும் அதான் இங்க வந்துட்டேன்” என சொல்ல அதைக்கேட்டு கலங்கிப் போனான் கோவலன்
”மாதவி நீயா இப்படி பேசறது” என சொல்ல அவளோ அவன் பேச்சை கூட கேட்கவில்லை
ஈஸ்வரமூர்த்தி அவனையும் மாதவியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு கண்ணகியை பார்க்க அவளோ தலையை ஆம் என்பது போல் ஆட்டி வைத்தாள், அதில் அவரும் மாதவிக்கு வேலை தரும் ஆர்டர் பேப்பரில் கையெழுத்திட்டார்.
மாதவிக்கு ஒரே சந்தோஷம் அவள் கண்ணகியிடம் சென்று
”மேடம் இப்ப நான் எந்த வகுப்புக்கு பாடம் எடுக்கனும்” என கேட்க அவளோ
”உன்னோட டைம்டேபிளை நான் தரேன், ஆசிரியர்கள் இப்போ குறைவா இருக்கறதால உங்களுக்கு அதிகப்படியான வேலையிருக்கும், புது ஆசிரியர்கள் வரும்வரை பொறுத்துக்கனும்“
”கண்டிப்பா” என சொல்ல அவளை கையோடு அழைத்துச் சென்றாள் கண்ணகி
கோவலனோ மாதவியை நோக்கிச் செல்வதைக்கண்டு அவனை தடுத்தார் ஈஸ்வரமூர்த்தி
”எதுக்கு வந்தியோ அதை செய்யாம எங்க போற”
”அது மறந்துட்டேன் தாத்தா இதோ இப்பவே போய் கண்ணகிகிட்ட மன்னிப்பு கேட்கறேன்”