(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தேங்க்ஸ் ஆன்ட்டி...” என்றாள்.

  

ஒரு விஷயம் தான் எனக்குப் புரியலை! கற்பகத்தோட மருமகளா இருந்துட்டு நீ இவ்வளவு சிம்பிளா இருக்குறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு! கொஞ்சமாவது நகை ஏதாவது போட்டிருக்கலாமே?”

  

டெய்சி கேட்டதும், அவளையும் அறியாமல் பாரதியின் கண்கள் கற்பகம் பக்கம் சென்றது. கற்பகமும் பாரதியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணமான முதல் நாள் முதல் பல முறை கற்பகம் சொல்வது இது போன்ற கேள்விகளை, பேச்சுகளையெல்லாம் தவிர்க்க தானோ??!!

  

இத்தனை மாதங்கள் போல அல்லாமல் முதல் முறையாக கற்பகம் அதை சொல்வது தனக்காக தான் என்று பாரதிக்கு தோன்றியது!

  

பாரதி எப்போதுமே ரொம்ப சிம்பிள் தான் டெய்சி...” என்று கற்பகம் சொன்ன அதே நேரத்தில்,

  

நகை போடனும்னு தான் இருந்தேன், உமாவோட அம்மா அப்பா வரவே அவசரமா கிளம்பி வர வேண்டியாதாகிடுச்சு...” என்றாள் பாரதி!

  

பரவாயில்லையே, மாமியாரும் மருமகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம சமாளிக்குறீங்க... ஹா ஹா ஹா...”

  

டெய்சியின் சத்தமான சிரிப்பில் மதுவின் லவுட் ஸ்பீக்கருக்கான காரணம் புரியவும், பாரதி முகத்தில் அவளையும் அறியாது புன்னகை தோன்றியது.

  

கவலைப் படாதே பாரதி, நீ சிம்பிளா இருக்குறதால ஒரு பிரச்சனையும் இல்லை. கற்பகம் தான் உன்னை டெஸ்ட் எல்லாம் வச்சு செலக்ட் செய்தாளாமே..."

  

டெய்சி சொன்ன தகவல் பாரதிக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது! அவள் யோசனையுடன் நிற்க,

   

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.