(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 58 - பிந்து வினோத்

58. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஃபங்க்ஷனுக்காக தயாராகி கொண்டிருந்த பாரதியின் மனதில், ஏற்கனவே இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு நடுவில் இது வேறா என்ற அலுப்பு இருந்தது! பவித்ராவை சந்திப்பது ஒன்று தான் இன்று நடக்க கூடிய ஒரே நல்ல விஷயம் என எண்ணியபடி அவள் கூந்தலை பின்ன தொடங்கிய போது, விவேக் அறையினுள் வந்தான். அவன் வந்தது பாரதிக்கும் தெரிந்தது... அதைக் கண்டுக் கொள்ளாதது போல காட்டிக் கொண்டு செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள் அவள்.

  

கண்ணாடியின் ஓரத்தில் தெரிந்த பிம்பத்தில், பல நாட்களுக்கு பிறகு ஷேவ் செய்து, முன்பு போல் பளிச்சென்று காட்சி அளித்தான் விவேக். அவன் பார்வை அவள் பக்கம் இருப்பது பாரதிக்கும் புரிந்தது. ஆனால் அவன் முகத்தில், பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவளை குழப்பியது... அவன் சொன்னது போல், அனைத்தும் அவன் திட்டமிட்டது போல் நடந்திருந்தால், அவன் இந்நேரம் சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்க அல்லவா வேண்டும்? ஆனால் அவனோ எப்போதும் ஏதோ யோசனையோடு அல்லவா இருக்கிறான்?

  

🌼🌸❀✿🌷

   

விவேக்கும் பாரதியை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் இது போன்ற தனிமை தருணங்களை அவன் தவறவிட்டதில்லை... மனைவியை சீண்டி அவள் கோபப் படுவதை பார்த்து ரசிப்பான் அல்லது எதையாவது சொல்லி, செய்து அவளை சிவக்க வைத்து அந்த அழகிய வெட்கத்தை பார்த்து ரசிப்பான்...

  

அன்று இரவு பேசியதற்கு பிறகு பாரதி அவனிடம் எதுவும் கேட்கவில்லை, கோபப்படவும் இல்லை! அவன் அவளை தவிர்க்கும் நிலை மாறி அவன் கண்ணில் படாமல் அவள் விலகி இருக்க முயன்றாள். அப்படியே இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் விவேக் அவள் மனம் புண் படுமாறு எதையாவது சொல்ல தான் செய்தான்...

  

அவன் விரும்பியதுப் போலவே பாரதி அவனை விட்டு மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பது அவனுக்குப் புரிந்தது... இந்த நாடகத்தை இன்னும் எத்தனை நாள் தொடர்வது என்று அவனுக்கு அயர்வாக இருந்தது!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.