(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“இவங்க எல்லாம் டாக்டர்ன்னு இருந்தா என்னத்த சொல்றது! விடுங்க அஹல்யா, அதான் அபினவ் உங்க வாழ்க்கையில வந்துட்டானே. இனிமேல் நடந்தது எல்லாம் கெட்ட கனவா கலைஞ்சுப் போயிடும். இப்போ இருந்து உங்க வாழ்க்கையில சந்தோஷம் மட்டும் தான்!”

  

“அபினவ் மட்டுமில்லை உங்களை மாதிரி நல்லவங்களை சந்திச்சதும் கூட பெரிய விஷயமா தான் தோணுது. பொதுவா மனுஷங்க மேலேயே எனக்கு நம்பிக்கைப் போயிடுச்சு. சரி அதெல்லாம் இருக்கட்டுங்க சத்யா, நான் போய் வேலையை ஆரம்பிக்குறேன்!”

   

அஹல்யா அதற்கு மேல் தாமதிக்காமல் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தாள்! அப்போது தான் போஸ்ட் பாக்ஸில் இருந்த வெள்ளை நிற கவரை கவனித்தாள்.

  

“இங்கே தான் இன்னும் போஸ்ட் வருது!” அவளை தொடர்ந்து வந்திருந்த சத்யாவிடம் சொல்லி விட்டு அஹல்யா கவரை வெளியே எடுத்தாள். அவளுடைய பெயரும் முகவரியும் மட்டும் அதில் இருந்தது.

  

“யாருக்கு அஹல்யா?” சத்யா வினவினாள்!

  

“எனக்கு தான்!” அஹல்யா கவரை பிரித்துக் கொண்டே நடந்தாள். கவருக்குள் இருந்த வெள்ளைத்தாளை வெளியே எடுத்தாள்.

  

உன்னோட பழைய வாழ்க்கையைப் பத்தி எனக்கும் தெரியும்

  

முன்பு வந்த மொட்டைக் கடிதாசியில் இருந்ததுப் போலவே பிரின்ட் செய்யப் பட்டக் கொட்டை எழுத்துக்கள் இங்கேயும் இருந்தது.

  

“அஹல்யா?” சத்யாவின் குரல் பக்கத்தில் கேட்டது. அவசரமாக லெட்டரை மடித்து கவருக்குள் வைத்தாள் அஹல்யா.

  

“என்ன லெட்டர் அஹல்யா?” சத்யா ஆர்வத்துடன் கேட்கவும்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.