“ஒன்னுமில்லை. ஸ்கூல்ல இருந்து அனுப்பி இருக்காங்க,” என தடுமாறி பொய் சொன்னாள் அஹல்யா.
“அப்போ சரி! ஷாலினியை கொஞ்சம் நேரம் பார்துக்குறீங்களா? நான் ஒரு ஃப்ரென்ட் கிட்ட பேசிட்டு வரேன்?”
“போயிட்டு வாங்க. நான் ஷாலினியை எங்க வீட்டுல வந்து இருக்க சொல்றேன்!”
“தேங்க்ஸ் அஹல்யா!”
உடனடியாக வீட்டில் இருந்து கிளம்பிய சத்யா நேராக சக்தியின் முன் வந்து தான் நின்றாள். மூச்சு வாங்க வந்தவளை சக்தி ஆச்சர்யத்தோடுப் பார்த்தாள்.
“சக்தி, அஹல்யாக்கு இன்னொரு மொட்டைக் கடிதாசி வந்துச்சு!”
“என்ன?” சக்தி முகத்தில் யோசனை தெரிந்தது!
“ஆமா சக்தி, இப்போ தான் அஹல்யா அதை திறந்து படிச்சாங்க. என் கிட்ட ஒன்னுமில்லைன்னு மழுப்பினாங்க. ஆனாலும் நான் அதுல இருந்ததை படிச்சேன்!”
“வாட்??? உன் கிட்ட இருந்து எதுவுமே தப்பாதா??”
“அவங்களுக்கு ஹெல்ப் செய்றதுக்காக தான் படிச்சேன் சக்தி. உன் பழைய வாழ்க்கை எனக்கு தெரியும்னு அதுல பிரின்ட் ஆகி இருந்துச்சு.”
“ஓ! உனக்கு எதுவும் இன்னைக்கு லெட்டர் வரலையா?”
“இல்லை! இந்த லெட்டர் மட்டுமில்லை. இன்னுமொரு அப்டேட்டும் இருக்கு. அந்த டாக்டர் கிருஷ்ணா அவ்வளவு நல்லவர் மாதிரி பேசினாரே, அவர் நல்லவர் இல்லை சக்தி. அஹல்யா