(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

வேங்கையனை பார்த்தப்பவே விரும்ப ஆரம்பிச்சேன், ஜானகி மனசை மாத்தி வேங்கையனோட சேர்த்து வைக்க நாடகம் போட்டேன், ஆனா அது முடியலை ஜானகி ரொம்ப தெளிவாயிருக்கா, அவள் மூர்த்தியை விடமாட்டா, வேங்கையனை விட்டு அவள் விலகிடுவாள்ன்னு நம்பி என் மனசுல இருந்த காதலை அவர்கிட்ட சொன்னேன், ஆனா அவரு என்னை ஏத்துக்கலை என் காதலையும் புரிஞ்சிக்கலை, அவர் மேலயும் தப்பு சொல்லமுடியாது கல்யாணம் ஆன ஒருத்தரை விரும்பறது என் தப்புதான்” என சொல்ல வேணியோ

  

”வாஸ்தவம்தான் மஹதி, ஆனா இங்க என்ன ஜானகி வேங்கையன்கூட குடும்பமா நடத்தறா, எந்த வழி கிடைக்கும் சட்டுன்னு இந்த வீட்டை விட்டு போய் மூர்த்தியை கைபிடிக்கலாம்னு இருக்காளே, அவளால வேங்கையனோட வாழ முடியாது, நீதான் ஏதோ முயற்சி செய்துப் பார்த்த, ஆனா நடந்தது என்ன, அவள் மாறலை ஆனா நீ மனசு மாறிட்ட, ஜானகி இன்னும் 6 மாசத்தில வேங்கையனை விட்டுப் போயிட்டா, அப்புறம் வேங்கையன் வாழ்க்கை என்னாகிறது, அவனை புரிஞ்சிக்கிட்டு ஏத்துக்க யார் இருக்கா, நீன்னா அவனை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அவனை ஏத்துக்குவ”

  

”ஆனா அவருக்குதான் என்னை பிடிக்கலையே”

  

”ப்ச் ஜானகியை நினைச்சிக்கிட்டு உன்னை பிடிக்கலைன்னு சொல்றாரு“

  

”அவள் போனபின்னாடி கூட அவள் நினைப்பா வாழ்வாரே தவிர இன்னொரு வாழ்க்கையை அமைச்சிக்க மாட்டாரு ஆன்ட்டி” என சொல்ல வேணியும் ஒப்புக் கொண்டு வேங்கையனிடம்

  

”மாப்பிள்ளை” என அழைக்க அவனோ

  

”சொல்லுங்க அத்தை”

  

”நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம், ஜானகி உங்களுக்கு வேணாம் மாப்பிள்ளை, உங்களுக்கு ஏத்தவ மஹதிதான், அவள் நல்லபொண்ணு அவளை கல்யாணம் செய்துக்குங்க”

  

”நீங்களா இப்படி பேசறது, ஜானகி என் மனைவி, அவள்தான் என் வாழ்க்கை, அவளை விட்டுட்டு நான் எப்படி இன்னொருத்தியை கல்யாணம் செய்துக்கறது, ஜானகியிருக்கறப்ப

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.