”வேங்கை நில்லுப்பா எங்க கிளம்பிட்ட” என கேட்க வேங்கையனோ தலை தாழ்த்தினான் அவனது கண்கள் கலங்கியிருந்தது
”கேட்கறேன்ல பதில் சொல்லு”
”நிலத்துக்குப்பா“ என்றான் தலை குனிந்தபடியே
”என் முகத்தைப் பார்த்துச் சொல்லு” என அதட்ட அதில் அவனும் தலையை தூக்கி தன் தந்தையைப் பார்த்தான்
அவனது முகமே அழுது வடிந்தது, ஆண்பிள்ளையல்லவா தான் அழுவதை மற்றவர்கள் பார்த்தால் அவமானமாகிவிடும் என நினைத்து தலைதாழ்த்திக் கொள்ள வீரசிங்கம் நீண்ட பெருமூச்சுவிட்டு ஜானகியை பார்த்தார்.
அவள் இன்னும் மூர்த்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அதைக்கண்ட வீரசிங்கமோ
”போதும் நிறுத்து ஜானகி” என உரக்க அதட்ட அதில் ஜானகி அடங்கிப் போனாள்
”ஜானகிக்கும் என் புள்ளைக்கும் கல்யாணம் செய்து வைச்சி நான் பெரிய தப்பு செய்துட்டேன், செய்த தப்பை நானே சரியாக்கறேன், இதுக்கு எதுக்கு 6 மாசம் வரைக்கும் காத்திருக்கனும் அதான் இப்பவே வெட்டவெளிச்சமா தெரிஞ்சிடுச்சே, இனி ஜானகி மனசு மாறமாட்டா அவள் மூர்த்திகிட்டயே போகட்டும்” என சொல்லிவிட ஜானகி முகம் மலர்ந்தாள்.
வேங்கையனோ துக்கத்தில் துவண்டான், மூர்த்தி அதிர்ந்தான், மஹதியோ வியந்தாள் குபேரனும் வேணியும் அவமானத்தில் தலைதாழ்த்த, மங்களம் மட்டும் தன் கணவரிடம் வந்து பேசினார்
”அப்போ என் புள்ளை வாழ்க்கை” என கேட்க அதற்கு அவரோ
”அதான் சின்ன மருமகள் இருக்காளே போதாதா உனக்கு” என சட்டென சொல்லிவிட அவர்