”இதுல முடிக்க என்ன இருக்கு நான்தான் சொல்லிட்டேனே எனக்கு ஜானகி வேணாம் மஹதிதான் வேணும்னு“
”இதுதான் உன் முடிவா”
”ஆமாம்” என சொல்ல அவர் ஜானகியைப் பார்த்து
”நீ என்னம்மா சொல்ற இப்பவும் உனக்கு மூர்த்திதான் வேணுமா” என கேட்க அவளோ ஆம் என்பது போல் தலையாட்ட மூர்த்திக்கு திக்கென்றது கோபத்தில் அவளை அடிக்க கைஓங்க வீரசிங்கம் தடுத்தார்
”என் வீட்ல நின்னுக்கிட்டு இதுபோல தப்பை செய்யாத, எதுவாயிருந்தாலும் உன் வீட்ல வைச்சிப் பேசிக்க இப்ப கிளம்பு” என சொல்ல அவனோ தன் தாய் தந்தையைப் பார்த்து
”வாங்க போலாம்” என சொல்ல ஜானகி விடவில்லை, வீரசிங்கத்தின் காலில் விழுந்தாள்
”மாமா நீங்கதான் எனக்கு ஒரு வழியை காட்டனும் மாமா, மூர்த்தி மாமா மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நான் இதே இடத்தில தூக்கு போட்டு தற்கொலை செய்துக்குவேன் மாமா” என அழுதபடியே சொல்ல வீரசிங்கமோ அவளை எழுப்பி நிற்க வைத்து
”இப்பவும் உன் கழுத்தில என் புள்ளை கட்டின தாலியிருக்கு, அது இருக்கறவரைக்கும் வேங்கையன்தான் உன் புருஷன், இதுல எப்படி நான் உனக்கு வழியை காட்டறது”
”தாலிதானே மாமா, இதோ இப்பவே நான் கழட்டிடறேன் என்னையும் மூர்த்தி மாமாவையும் சேர்த்து வைச்சிடுங்க மாமா” என சொல்லியவள் சிறிதும் யோசிக்காமல் தாலியை கழட்ட முனைய அதைக்கண்ட மூர்த்தி அரண்டான், வேங்கையனின் இதயமே நின்றுவிடும் போலானது, குபேரனும் வேணியும் மிரண்டனர், வீரசிங்கமோ உடனே அவளை தடுத்தார்
”என்ன மாமா“