(Reading time: 23 - 46 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

அவ்வனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கண்ணகி இறுதியில்

  

”உங்க பையன் படிக்கனும்னு முன்பின் தெரியாத நானும் சரி இங்க வேலை செய்ற ஆசிரியர்களும் சரி படாதபாடு படறோம், ஆனா நீங்க என்னடான்னா எங்களையே திட்டறீங்க”

  

”அதுக்காக பையனை அடிப்பீங்களோ”

  

”அவன் என்ன சின்ன குழந்தையா ஒழுங்கா படிக்கலைன்னா கண்டிக்கறது தப்பில்லையே”

  

”மாணவர்கள் மேல கை வைக்க கூடாது அது தெரியாதா உங்களுக்கு”

  

”ஓ தெரியுமே அதெல்லாம் பள்ளி மாணவர்களுக்குதான், இவங்களுக்கு கிடையாது நானும் ஒரு பள்ளியில வேலை பார்த்த டீச்சர்தான், எனக்கும் எல்லா சட்டமும் தெரியும்”

  

”அடிச்சிதான் படிப்பு சொல்லிக் கொடுப்பீங்கன்னா இந்த காலேஜே என் பையனுக்கு வேணாம் டிசி கொடுத்துடுங்க”

  

“ஓ தாராளமா” என சொல்லி அவள் டிசி ரெடி செய்து 10 நிமிடத்தில் தந்துவிட்டாள் அதை வாங்கிப் பார்த்த மாணவனுக்கு திக்கென்றது, அவனோ தன் தந்தையிடம் குறை கூற உடனே அவனது தந்தை கண்ணகியிடம்

  

”என்னம்மா இது தகுதி சான்றுல பேட் னு எழுதியிருக்கீங்க குட்ன்னு எழுதி கொடுங்க“

  

”குட்னு எழுதி கொடுக்கற அளவுக்கு உங்க பையன் என்ன செஞ்சாப்ல, சரியா படிக்கறதில்லை ஒழுங்கா வகுப்புக்கு வர்றதில்லை, ஏனோதானோன்னு இருந்தாப்ல அவருக்கு நான் குட்னு எழுதனுமா முடியாதுங்க, அப்படி எழுத கல்லூரி சட்டத்தில இடம் இல்லை”

  

”இப்படியிருந்தா எந்த காலேஜ்லயும் என் புள்ளையை சேர்த்துக்க மாட்டாங்க“

  

”அது உங்க பிரச்சனை, நான் சட்டப்படிதான் நடந்துக்கிட்டேன் நீங்க கிளம்பலாம்”

2 comments

  • மிக்க நன்றி, எங்க கோவலன் பேராசியரா வந்து ரொமான்ஸ் பண்ற மாதிரி கதை போயிடுமோனு பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் ஆகல, அதுக்கே மிக்க நன்றி

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.