பாடத்தை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள், கண்ணகி வரவும் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றார்கள்.
”வாங்க மேடம்” என கண்ணகியை பார்த்து மாதவி அழைக்க கண்ணகியோ
”உங்க வகுப்புல சுத்தமாக படிக்காம இல்லை படிக்க பிடிக்காம யாராவது இருக்காங்களா”
”ஏன் கேட்கறீங்க”
”சொல்லுங்க சரியா படிக்காம யாராவது இருக்காங்களா” என கேட்க மாதவியோ அந்த வகுப்பில் அவளுக்குத் தெரிந்து ஒரு மூவரை எழுப்பினாள் அவர்களைக்கண்டு
”ஏன் உங்களுக்கு படிப்பு ஏறலை”
”அது வந்து வந்து”
”பதில் சொல்லுங்க சொல்லிக் கொடுக்கற பாடம் புரியலையா இல்லை படிக்கனும்னு தோணலையா”
”இரண்டும்தான்”
”சரி நீங்க 3 பேரும் உங்க பையை எடுத்துக்கிட்டு வெளிய வாங்க” என சொல்ல அவர்கள் பயந்தார்கள்
”டிசி கொடுக்கப் போறீங்களா”
”இல்லை வாங்க”
”எதுக்குன்னு சொல்லுங்க வரோம்”
”வாங்கன்னா வரனும் கமான்” என சொல்லிவிட்டு மாதவியிடம்