”பரிட்சையை நினைச்சி பயந்துடாதீங்க, பயந்தா படிச்சதும் மறந்துப் போயிடும் உங்களுக்கு தெரிஞ்ச கேள்விகள் இருந்தா உடனே அதுக்கான பதிலை எழுதிடுங்க தெரியாத கேள்வியை நினைச்சி வருத்தப்பட வேணாம், இந்த செமஸ்டர்க்கு மட்டும் சொல்றேன் பாஸ் மார்க் எடுத்தா போதும், அடுத்தடுத்த செமஸ்டர்க்கு மட்டும் நிறைய மதிப்பெண்கள் எடுக்கனும், முடிஞ்சவரை இந்த செமஸ்டர்ல யாரும் அரியர் வைக்க கூடாது, சொல்லிட்டேன்” என கண்டிப்புடன் சொல்ல மாணவர்களும் தங்கள் வகுப்புக்குச் சென்றார்கள்.
பரிட்சை நேரம் ஆரம்பமானது.
கண்ணகி எந்தவொரு கவலையும் இன்றி நிம்மதியாக இருந்தாள். 5 நாள் பரிட்சை ஒரு முடிவுக்கு வந்து விடுமுறையும் அளிக்கப்பட்டது.
மாதவிக்கு பெரிய மலையை சுமந்தது போன்ற பாரத்துடன் வீடு வந்தாள். கண்ணகியிருக்கவும்
”என்னால முடியலை கண்ணகி”
”என்னாச்சி மாதவி”
”யப்பா பாடம் சொல்லிக் கொடுக்கறது ஈசின்னு நினைச்சேன் ஆனா இங்க வந்த பின்னாடிதான் அது எவ்ளோ கஷ்டம்னே தெரியுது”
”அப்படியில்லை மாதவி ஒரே மாசத்துக்குள்ள பாடம் எடுக்கனும்ங்கற நெருக்கடியில இருந்ததால உனக்கு அப்படி தெரியுது”
”எப்படியோ 10 நாள் லீவு நிம்மதியா இருக்கலாம்”
”நீயிரு நான் வேலைக்குப் போகனும்”
”ஏன்”