(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

வரவேற்பது போல் செல்லவும், பாரதி அவன் பார்வை இருந்த திசை பக்கம் பார்த்தாள்.

  

அங்கே ஒரு அழகிய பெண் இருந்தாள்! அழகு என்பதற்கு இலக்கணம் இவள் தான் என்று எண்ண வைக்கும் அழகு! அதுவும் கண் கூசாத அழகு! கிட்டத்தட்ட, அவளின் அருகில் வந்து கை குலுக்கி ஏதோ பேசிய விவேக்கின் உயரம் இருந்தவளை இமைக்க மறந்து பார்த்தபடி நின்றாள் பாரதி.

  

அவள் அணிந்திருந்த பேபி பிங்க் நிற சேலையை மிகவும் நேர்த்தியாக கட்டி இருந்தாள்! அவளின் சுருட்டை முடி மிகவும் அழகாக இருந்தது! அதில் அவள் சூடி இருந்த மல்லிகை பூச்சரம் அழகுக்கு அழகு சேர்த்தது!

   

டெய்சியின் பேச்சில் மருமகளின் கவனம் இல்லை என்பதை உணர்ந்து பாரதியின் பார்வை இருந்த பக்கம் பார்த்த கற்பகத்தின் முகமும் மலர்ந்தது.

  

அட லாவண்யா! டெய்சி, நீ பாரதி கிட்ட பேசிட்டு இரு... நான் இதோ வரேன்...” என சொல்லி சென்றாள் கற்பகம்!

  

லாவண்யா!

  

பாரதியின் காதுகளில் மீண்டும் மீண்டும் அந்த பெயர் எதிரொலித்தது! எதனாலோ அவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது... அதுவரை அவள் மறைத்து வைத்திருந்த இதயத்தின் வலி மீண்டும் மேலோங்கியது...

  

கணவனின் அருகில் நின்று சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தவளின் மேல் பொறாமை பார்வை பார்ப்பதை பாரதியால் தவிர்க்க முடியவில்லை. என்ன என்ன என்று குழம்பிக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதாக அவளுக்கு தோன்றியது... ஆனால் இதை அவள் தெரிந்துக் கொள்ளாமலே இருந்திருக்கலாமே!!!

  

பாரதி, பாரதி!”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.