(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

கொம்பனின் பைக்கில் ஏறிக் கொள்ள கொம்பனும் அவளை அழைத்துக் கொண்டு அவளது வீட்டில் இறக்கிவிட்டான்.

  

அவளின் வரவை அறியாத சண்முகமும் மகிழ்ச்சியாக வரவேற்றார் ஆனால் கொம்பன் வராமல் சென்றுவிட குழம்பி தன் மகளிடம் விசாரித்து என்னவென தெரிந்துக் கொண்டு நொந்துப் போனார்.

  

”ஏன்மா இப்படியொரு காரியம் செய்த மாப்பிள்ளையே உன்னோட வாழ ஆசைப்படறப்ப நீ இப்படி ஒதுங்கி வரலாமா”

  

”இல்லைப்பா என்னால முடியலைப்பா ரொம்ப கஷ்டமாயிருக்கு அதான் வந்துட்டேன்”

  

”கொம்பன் இல்லாம உன்னால வாழமுடியுமா”

  

”தெரியலைப்பா பார்க்கலாம்” என சோர்வாகவே தன் வீட்டிற்குள் நுழைந்தாள். அவளுக்கு அந்த வீடே பிடிக்கவில்லை வெறுப்புற்றாள். ஓய்ந்துப் போய் தன் அறையில் முடங்கினாள்.

  

காவேரியின்றி கொம்பனின் வீடே களையிழந்துவிட்டது, கொம்பனும் களையில்லாமல் இருந்தான். அவனது பெற்றோரும் அவனின் நிலைமையை எண்ணி வருந்தினார்கள்.

  

நாட்கள் செல்ல செல்ல கொம்பனுக்கு வாழவே பிடிக்கவில்லை, அந்த பக்கம் காவேரிக்கும் அதே நிலைமைதான் போதும் கொம்பனிடம் சென்றுவிடலாமா என்று கூட நினைத்தாள் ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்து நிப்பாட்டியது கொம்பனும் காவேரியிடம் செல்ல தவித்தான், ஆனால் அவள் ஏற்பாளோ மாட்டாளோ என்ற அச்சத்தில் அமைதியாகிப் போனான்.

  

இதில் இவ்விருவரின் பெற்றோரும் ஒன்றுகூடி ஒரு சதிதிட்டத்தை தீட்டினார்கள். அதன்படி காவேரிக்காக சண்முகம் ஒரு பொய்யான மாப்பிள்ளையை அழைத்துவந்து அவளின் முன் நிப்பாட்ட அவள் அரண்டுப் போனாள்

  

”அப்பா”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.