(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பாரதியை பற்றி பேச்சை தொடங்குவாள் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தான். ஆனால் இரவு உணவிற்கு பின்பும் பவித்ரா அமைதியாக இருக்கவும்,

  

பவி, பாரதி கிட்ட பேசினீயா?” என்று மனைவியிடம் கேட்டான்.

  

பல புத்தகங்களை புரட்டிப் பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த பவித்ரா, கணவனை நிமிர்ந்துப் பார்த்து, இல்லை என்ற அர்த்தத்தில் தலை ஆட்டினாள்.

  

ஏன் பவி, பேசி இருக்கலாமே? ஈவ்னிங் ஆறு மணி மாதிரி பாரதி எனக்கு ஃபோன் செய்திருந்தா... அவ பேச்சே ரொம்ப டல்லா இருந்தது... நீ கட்டாயம் வருவேன்னு நினைச்சிருப்பா போல இருக்கு...”

  

ம்ம்ம்...”

  

பவித்ரா வேறு எதுவும் சொல்லாமல் தன் வேலையை தொடரவும், ரமேஷ் அந்த பேச்சை தொடருவது சரி இல்லை என முடிவு செய்து, வார பத்திரிக்கை ஒன்றை எடுத்து படிக்க தொடங்கினான். ஒரு சில நிமிடங்கள் அமைதியில் நகர, திடீரென பவித்ரா பேசினாள்.

  

ஏன் பாரு வாய்ஸ் டல்லா இருந்ததுன்னு சொல்றீங்க?”

  

பவித்ராவாகவே பேசுவாள் என்பது ரமேஷ் எதிர்பார்த்தது தான்! ஆனால், அதற்காக அவளை நக்கல் செய்யாது,

    

ஃபோன்ல கேட்க அப்படி தான் இருந்தது பவி... நான் நிறைய தடவை பாரதி கிட்ட ஃபோன்ல பேசி இருக்கேனே, எனக்கு என்னவோ வித்தியாசம் தெரிஞ்சது... ஆனால் என்ன வித்தியாசம்னு டிஸ்க்ரைப் எல்லாம் செய்ய தெரியலை...” என்றான்!

  

ம்ம்ம்...???” என்று யோசனையுடன் சொன்ன பவித்ராவால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.

   

எழுந்து, அலமாரியின் கதவை திறந்து, செல்ஃபோனை வெளியில் எடுத்தாள். பாரதியின்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.