சொல்ல ஆசிரியர்களுக்கும் பெருமையாக இருந்தது மாதவியோ
”எங்களோட முயற்சியை காட்டிலும் உங்களோட முயற்சி மகத்தானது இருக்கற வேலைகள் பத்தாதுன்னு 80 மாணவர்களுக்கு தனியா பாடம் எடுத்தீங்க, ஒண்ணு தெரியுமா நான் ரிசல்ட் பார்த்தேன் எல்லா மாணவர்களும் பாஸாகியிருந்தாங்க, ஆனா எல்லா பாடத்திலயும் 50 மார்க்குக்கு மேல வாங்கின மாணவர்கள் பட்டியல்ல நீங்க பாடம் எடுத்த 80 மாணவர்கள் இடம்பெற்றிருந்தாங்க, இது பெரிய சாதனை அவங்களை நாங்களே சரியா படிக்க மாட்டாங்கன்னு சொல்லி ஒதுக்கினோம், அப்படி ஒதுக்கின மாணவர்களை கூட வெற்றி பெற வைச்ச உங்களோட திறமைக்கு என்னோட சல்யூட்” என சொல்லி அவள் சல்யூட் வைக்க அதைப்பார்த்து மற்ற ஆசிரியர்களும் சல்யூட் வைத்தார்கள்.
கண்ணகிக்கு இந்த பாராட்டு புகழ்ச்சி அனைத்துமே மகிழ்ச்சியை தந்ததே தவிர ஒரு போதும் கர்வத்தை தரவில்லை, அவள் அனைத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்டு பேசினாள்
”இந்த சந்தோஷம் இப்பவே முடிஞ்சிடக்கூடாது, ஒவ்வொரு செமஸ்டர் எக்ஸாம்லயும் மாணவர்கள் ஜெயிச்சிக் காட்டனும், இந்த செமஸ்டர்ல பாஸ் மார்க் எடுக்க முடிஞ்ச உங்களால அடுத்தடுத்து வர்ற பரிட்சையில பாஸ் மார்க் தாண்டி அதிக மதிப்பெண் எடுக்க முடியும்னு நான் நம்பறேன் நீங்க என்ன சொல்றீங்க” என கேட்க மாணவர்கள் ஒன்று கூடி சத்தமாக சொன்னார்கள்
”முடியும்” என்று அதைக்கேட்டு கண்ணகி நிம்மதியானாள்.
ஈஸ்வரமூர்த்திக்கு திருப்தியாக இருந்தது அவர் நினைத்து நிறைவேறிவிட்டது, இனி கல்லூரியை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை அடுத்து கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே கோவலன் எங்கே என்றுதான் யோசித்தார்.
கண்ணகியோ மாணவர்களிடம்
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்