(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கண்ணகியோட விடாமுயற்சியால எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெற்றாங்க, அவள் புத்திசாலி திறமைசாலி மட்டுமில்லை, பொறுமைசாலியும் கூட உன்னால உதயமூர்த்தியால ஏன் என்னால கூட முடியாத விசயத்தை அவள் செய்து காட்டிட்டா, அவளுக்கு இருக்கற திறமையை நினைச்சி நான் வியக்கிறேன், அவள் மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்துட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”

  

”ஆனா என்னோட சந்தோஷம் பறிபோயிடுமே”

  

”ஏன் இப்படி பேசற, இதுவே உன் அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தா உனக்கு கண்ணகியைதான் பேசி வைச்சிருப்பாங்க“

  

”அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க என்னோட விருப்பத்தை மதிச்சிருப்பாங்க”

  

”உன் விருப்பம்தான் என்ன”

  

”எனக்கு கண்ணகி வேணாம்“

  

”வேற யார் வேணும் உனக்கு” என சட்டென கேட்க அதற்கு அவன் தடுமாறினான்

  

”சொல்லுப்பா வேற யார் வேணும் உனக்கு யாரையாவது விரும்பறியா” என கேட்க அவனோ மாதவியை நினைத்தான், அவளை சந்தித்த போது கூட அவள் அவனை விரட்டியதுதான் கண்முன் தெரிந்தது

  

”அப்படியெல்லாம் யாரும் இல்லை” என்றான் பொய்யாக

  

”அப்புறம் என்ன”

  

”ப்ச் புரிஞ்சிக்குங்க தாத்தா என்னால கண்ணகியை கல்யாணம் செய்துக்க முடியாது”

  

”நீ செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவச்சிருக்கனும், பரவாயில்லை செஞ்ச தப்புக்கு பரிகாரமாவது தேடிக்க”

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.