”அது உன் கையிலதான் இருக்கு”
”நான் என்ன செய்யனும் சொல்லுங்க செய்றேன்”
”கண்ணகியை கல்யாணம் செய்துக்க, இது என்னோட கடைசி ஆசையா நினைச்சிக்க, நாளைக்கே நான் கண்மூடினாலும் நீ பத்திரமான இடத்திலதான் இருக்கங்கற நிம்மதியோட நான் போய் சேர்ந்துடுவேன்”
”தாத்தா சாவை பத்தியே பேசி என்னை கஷ்டப்படுத்தாதீங்க, நான் பாவம் என் விருப்பத்துக்கு மாறா என்னால கண்ணகியை கல்யாணம் செய்துக்க முடியாது”
”அப்போ எனக்காக செய்துக்க, என் மேல உனக்கு பாசம் இருந்தா நான் நிம்மதியா நீ சொன்ன மாதிரி 100 வருஷம் வாழனும்னு ஆசையிருந்தா, என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கண்ணகியை நீ கல்யாணம் செய்துக்கனும், இல்லைன்னா நான் இப்படியே பசிபட்டினியுமா கிடந்து சாகறேன்”
”ப்ளாக்மெயில் பண்ணாதீங்க தாத்தா”
”நல்ல விசயத்துக்காக ப்ளாக்மெயில் பண்ணலாம் தப்பில்லை, உனக்கு இப்ப எரிச்சலா இருக்கலாம் ஆனா பின்னாடி இதை நினைச்சி நீ சந்தோஷப்படுவ, கண்ணகி உனக்கு ஏத்தவ அவளை கல்யாணம் செய்துக்க எனக்காக”
என கைகூப்பி கெஞ்ச கோவலன் துடித்துப் போனான். அவன் பேச இவர் பேச என அவர்களின் பேச்சுவார்த்தை அரை மணி நேரம் நீண்டது. இதில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் தவித்தவன் பூவா தலையா போட்டுப் பார்க்க எண்ணி நாணயத்தை சுண்டினான் அவனை விட தாத்தா ஆர்வமாக இருந்தார் அதன் படி தலைவிழுந்தால் தன் விருப்பம் பூ விழுந்தால் தாத்தாவின் விருப்பம் என முடிவு எடுத்தான்.
மறுபக்கம் கண்ணகியோ வராண்டாவில் காத்திருந்தாள் மாதவி கூட விசயம் அறிந்து அதே ஆஸ்பிட்டலுக்கு வந்தாள் எங்கே என அங்கு இங்கு என தேடிய போது கண்ணகியை